இயற்கை விவசாயி தாந்தோணி.

“இயற்கை விவசாயம் 

ஆரம்பிச்சபோது பைத்தியம்னு சொன்னாங்க”

#PasumaiVikatanAgriExpo2016 #AgriExpoErode
“எங்களோட 15 ஏக்கர் நிலத்துல கப்பகார், முட்டகார், மோசனம்னு வகைவகையா பாரம்பர்ய ரகங்கள பயிர் செஞ்சிட்டு வந்தோம். 1970கள்ல ரசாயன விவசாயத்துக்கு மாறின பிறகு நஸ்டம் தான் வந்துச்சு. இதை உணர்ந்து இயற்கை விவசாயத்துக்கு மாறினேன். மாட்டோட சாணம், சிறுநீரை பயன்படுத்தி ஜீரோ  பட்ஜெட் முறையில் விவசாயம் செஞ்சேன். 
‘ஊர்ல இருக்கிறவங்களாம் இந்த ஆளுக்கு என்ன பைத்தியம் புடிச்சிருக்கா’ன்னு தான் சொன்னாங்க. ஆனா, அந்த முறை ஏக்கருக்கு 5 ஆயிரம் கிலோ  நெல் மகசூல் எடுத்தேன். ரசாயன விவசாயத்துலயே முடியாதத இயற்கை விவசாயத்துல  சாதிச்சு காட்டினேன். இப்போ ஏக்கருக்கு 10 டன் நெல் மகசூல் எடுக்க முயற்சி செஞ்சுட்டு இருக்கேன். இயற்கை விவசாயத்துல சாதிக்க முடியும் என்பதற்கு நானே உதாரணம்” என்றார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி தாந்தோணி.

Leave a Reply