இது அடுத்த அதிரடி;   முதல்வர் ஓபிஎஸ்

இது அடுத்த அதிரடி; முதல்வர் ஓபிஎஸ் செல்லும் வழியில் கட்சிக்காரர்கள் நின்று கோஷம், துதி பாட கூடாது, கொடி, பேனர் வச்சி தொல்லை பண்ண கூடாது!

By கார்த்திக் பிரபாகரன் – December 23, 

சென்னை: கடந்த 2001-ம் ஆண்டு முதல்வர் பன்னீர் செல்வம் வருவாய் அமைச்சராக இருந்தபோது, முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு, டான்சி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டதால், பன்னீர் செல்வத்தை முதல் முறையாக முதல்வர் நாற்காலியில் அமர வைத்தார் ஜெயலலிதா. அதன் பின் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றார். அதன்பிறகு, அளவுக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கில், தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2014-ஆம் ஆண்டு செப்டம்பர், இரண்டாவது முறையாக மீண்டும் முதலமைச்சர் பொறுப்பை பன்னீர் செல்வத்திடம் ஒப்படைத்தார்.

அதன்பிறகு, ஜெயலலிதா கடந்த டிசம்பர் 6ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனால், தமிழகத்தின் 27-ஆவது முதலமைச்சராக, மூன்றாவது முறையாக இதற்கிடையில், முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வமும், மற்ற அமைச்சர்களும் நள்ளிரவில் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மறைந்த ஜெயலலிதாவை தொடர்ந்து ஓபிஎஸ் செல்லும் போதும் கட்சிக்காரர்கள் நின்று வணக்கம் தெரிவித்து வந்த நிலையில் ஓபிஎஸ் செல்லும் வழியில் நிற்பது, கோஷம் போடுவது, பேனர் வைத்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பது, அம்மா அம்மா என திருவிழாவில் காணாமல் போன பிள்ளை கத்துவது போல துதி பாடுவது என அனைத்துக்கும் அதிரடியாக தடை விதித்துள்ளாராம்.

முதல்வராக ஜெயலலிதா இருந்த போது அவரது சிறப்பே வழியில் நின்று வணங்கும் தொண்டர்களை பார்த்து சிரித்தபடி கையசைத்து செல்வதுதான். ஏதோ தொண்டர்களை பார்த்து கையசைத்து செல்கிறார் என்று நினைத்தால் அதுதான் இல்லை என்பதை அவரால் பயன் பெற்ற பல தொண்டர்கள் சொல்வதை வைத்து காணலாம்.

சாலையில் நிற்கும் தொண்டர்களை தினமும் பார்த்தபடி செல்வார் ஜெயலலிதா, பின்னர் ஒருநாள் போலீசார் ஓடிவந்து குறிப்பிட்ட தொண்டரை தலைமை செயலகத்துக்கு அழைத்து செல்வார். அவரது குறைகள் கேட்டு நிவர்த்திக்கப்படும். அல்லது திடீரென போலீசார் அந்த தொண்டரிடம் மனுவை பெற்று செல்வார். அவரது கோரிக்கையோ , அல்லது கட்சி நிர்வாகிகள் மீது புகார் கேட்டு சரி செய்யப்படும்.

இப்படி ஒரு நடைமுறை அதிமுகவில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் உண்டு. ஓபிஎஸ் முதல்வராக வந்த பிறகு தொண்டர்கள் சிலர் அவர் வரும் வழியில் நின்று வணங்கி வந்தனர். இந்நிலையில் அதே போல் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த வட்டச்செயலாளர் தம்பியும் அதிமுக சார்பில் கூட்டுறவு சங்கத்தில் பொறுப்பில் இருக்க்கும் மனோகரன் எனபவர் ஓபிஎஸ் ப்போகும்போது நின்று வணங்கி உள்ளார்.

அப்போது போலீசார் அவரை நெஞ்சில் கைவைத்து அடிக்காத குறையாக விரட்டியுள்ளனர். இதுபற்றி போலீசாரிடம் ஓபிஎஸ்போனவுடன் அவர் கேட்டபோது இனி யாரும் வழியில் நிற்க கூடாது என மேலிருந்து எங்களுக்கு உத்தரவு நாங்க அதை நடைமுறை படுத்துகிறோம் வருத்தப்படவேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

seithipunal

Leave a Reply