ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்

ஆப்பிள்’ நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இளைஞர்களுக்குச் சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே…
1) எனது மந்திரங்களில் ஒன்று ‘எளிமை’. ஆனால், நீங்கள் நினைப்பதுபோல் எளிமையாக இருப்பது அத்தனை எளிதானது அல்ல; சிக்கலாக இருப்பதைவிடக் கடினமானது அது. எளிமையாக இருப்பதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
 2) அடுத்தவரின் வாழ்க்கையை நீங்கள் வாழாதீர்கள். அடுத்தவரின் சிந்தனையில் எழுந்த கோட்பாடுகளில் நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். அடுத்தவரின் அபிப்ராயங்கள் உங்கள் உள்மனக் குரலை அமுக்கிவிட இடம் கொடுக்காதீர்கள். உங்கள் மனமும் உள்ளுணர்வும் காட்டிய வழியில் செல்வதற்கு உங்களுக்குத் துணிவு இருக்க வேண்டியது அவசியம்.
 3) மேஜையின் பின்பக்கம் சுவரை ஒட்டித்தான் இருக்கும்; யார் பார்வையிலும் படாது என்பதற்காகத் தச்சர் அதன் பின்பக்கத்தை சொரசொரப்பான ஃப்ளைவுட்டால் மூடிவிடமாட்டார். அங்கேயும் அழகான டிஸைனில் வழவழப்பான ஃப்ளைவுட்டையே உபயோகித்து, அந்த மேஜையைத் தயார் செய்வார். அதுபோல, நமது ஒட்டுமொத்த செயல்களும் அழகுணர்ச்சியோடு செய்யப்பட வேண்டும். அந்தத் தரமும் சிரத்தையும்தான் நம்மை வாழ்க்கை நெடுக எடுத்துச் செல்லும்.
4) ஒரு வேலையைச் சிறப்பாகச் செய்து முடிப்பதற்கான ஒரே வழி, அந்தச் செயலை மனப்பூர்வமாக நேசிப்பதுதான்.
5) என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் என்ன செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதும்.

Leave a Reply