ஆகஸ்ட் 27: டோனால்ட் பிராட்மன் எனும் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் பிறந்த தினம் இன்று

ஆகஸ்ட் 27: டோனால்ட் பிராட்மன் எனும் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் பிறந்த தினம் இன்று – சிறப்பு பகிர்வு
கிரிக்கெட்டின் அதிகபட்ச டெஸ்ட் சராசரியான 99.94 இவர் வசம் இருந்தது என்பது இவரின் பிரம்மாண்டத்தை தெளிவாக சொல்லும். சின்னப்பையனாக யாரும் பயிற்சி தராமல் கிரிக்கெட் ஸ்டாம்ப்பை கொண்டு கோல்ப் பந்தை அடித்து விளையாடி பயிற்சி செய்தவர் அவர் . அவர் ஆடிய காலத்தில் டெஸ்ட் போட்டிகள் மிகக்குறைவாகவே ஆடப்பட்டன .
அப்பொழுது இங்கிலாந்தும்,ஆஸ்திரேலியாவும் மிகப்பெரிய சண்டைக்கோழிகள் . ஆஷஸ் தொடரை வாழ்வா சாவா பிரச்சனையாக இருநாட்டவரும் கருதினார்கள் . இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த தருணத்தில் கிரிக்கெட்

உலகிற்குள் ஆஸ்திரேலிய அணியின் சார்பாக நுழைந்தார் பிராட்மன் .இன்றைக்கு போல அவர் காலத்தில் கிரிக்கெட்டில் பெரிய வருமானம் கிடையாது ;ஸ்டாக் ப்ரோக்கராக வேலை பார்த்தார் இவர் ;காலையில் ஏழு மணியில் இருந்து பத்து

வரை அங்கே வேலை பார்த்துவிட்டு மைதானத்துக்கு வருவார் ;பின் இரவு ஏழு முதல் பத்து மணிவரை மீண்டும் அந்த வேலையை செய்வார்.
இவர் ஆடிய இருபதாண்டு காலத்தில் ஒரே ஒரு முறை தான் ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை இழந்தது என்பதே இவர் எத்தகைய ஆட்டத்திறன் கொண்டவர் என்பதை விளக்கும் . இங்கிலாந்து ஜெயித்த ஒரு முறையும் பாடிலைன் என்கிற

பந்துவீச்சு முறையை பின்பற்றியது -ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி லெக் ஸ்டம்ப் பக்கம் பந்து எழும்புமாறு செய்வார்கள் ;எண்ணற்ற பீல்டர்கள் லெக் சைடில் நிற்க வைக்கப்பட்டு விக்கெட்டை கழட்டி விடுவார்கள் .இது கிரிக்கெட்டின் ஆரோக்கியமான போக்கிற்கு எதிரானது என எதிர்ப்பும் எழுந்தது .அப்படிப்பட்ட தொடரில் கூட 56 என்கிற சராசரியை வைத்திருந்தார் அவர் .
ஒரு உள்ளூர் போட்டியில் டான் பிராட்மன் ஆட களம் புகுந்தார். அவரின் விக்கெட்டை ஏற்கனவே ஒருமுறை ஐம்பத்தி இரண்டு ரன்களுக்கு ஒருமுறை எடுத்திருந்த போட்டி நடந்த ப்ளாக்ஹீத் ஊரின் வீரரான வெண்டெல் பில்லுக்கு ஒரே ஆரவாரத்தின் மூலம் உற்சாகப்படுத்தினார்கள் ரசிகர்கள். முதல் ஓவரின் எட்டு பந்துகளில் 6, 6, 4, 2, 4, 4, 6, 1 என்றும் அடுத்த ஓவரில் 6, 4, 4, 6, 6, 4, 6, 4 என்றும் அடித்து நொறுக்கிய பிராட்மன் இருபத்தி இரண்டு பந்துகளில் நூறு ரன்களை கடந்தார் ! இந்தப்போட்டி நடந்த வருடம் 1931. !
கடைசி இன்னிங்க்சில் நான்கு ரன்கள் எடுத்தால் 7,000 ரன்கள் மற்றும் நூறு என்கிற சராசரியை தொட முடியும் என்கிற நிலையில் டக் அவுட்டாகி வெளியேறினார் . சச்சின் அவரை அவரின் 90 வயதில் சந்தித்தார் ;”நீங்கள் இப்பொழுது ஆடியிருந்தால் என்ன சராசரி வைத்திருப்பீர்கள் டான் ?”என சச்சின் கேட்ட பொழுது “70 !”என்றார் டான் .ஏன் அப்படி என்பது போல சச்சின் பார்க்க ,”கம்மான் !90 வயதில் எழுபது என்பது ஒன்றும் குறைவான சராசரி இல்லை !”என்றார் பிராட்மன் . கிரிக்கெட்டில் 99.94 என்கிற எண்ணுக்கு மிகப்பெரிய வசீகரத்தை தந்த நூற்றுக்கு நூறு கச்சிதமான பிராட்மனின் பிறந்த தினம் இன்று
– பூ.கொ.சரவணன்

Leave a Reply