அம்மாவின் மரணம்: ஸ்டாலின் அவர்களின் கருத்து

“என் காலத்திய எனக்கு தெரிந்த தலைவர்களில் எனக்கு உடன்பாடில்லாத ஒரு தலைவருக்காக முதன் முறையாக என்னை மீறி அழுது கொண்டிருக்கின்றேன்
இத்தனைக்கும் அவர் எனக்குப் பிடித்த தலைவரில்லைதான்.
அப்படியிருந்தும் மனம் கசிகிறது.
ஆனால் அவர்
ஒரு பெண்
தனித்து நின்று அரசியலில் வென்று காட்டியவர்.
எதிரிகளை தயவு தாட்சண்யமின்றி பந்தாடியவர்.
தனது பிடிவாத குணத்தையும் நினைத்ததை செய்வதை யாருக்காகவும்
தளர்த்திக் கொள்ளாதவர்.
இந்த குணங்கள் அவரிடம் இல்லாதிருந்தால்
ஒருவேளை எனக்கும் அவர் பிடித்த தலைவராக இருந்திருக்கலாம்.
ஆனால் …
அந்த குணங்கள் அவரிடம் இல்லாதிருந்தால்
அரசியலில் இருந்து அவரை எப்போதோ ஒழித்துக் கட்டியிருப்பார்கள்.
அரசியலில் சாணக்கியர்கள் என்று சொல்லப்பட்டவர்களுக்கெல்லாம் ஒற்றைப்பெண்ணாக சிம்ம சொப்பனமாக இருந்தவர்.
அவரைப் பாராட்டவோ
பரிகசிக்கவோ பல விஷயங்கள் நம்மிடம் இருக்கலாம்.
அதையெல்லாம் மீறிய ஒரு பரிவு அவர்மீது ஏற்படுகிறதென்றால் …
அது எதனால் ஏற்படுகிறதென்று விளக்கம் சொல்லத் தெரியவில்லை.
நம்மோடு இத்தனை காலம் நெருக்கமாக வாழ்ந்த ஒரு பெண் மிகுந்த அவஸ்தைகளோடு
அரசியலோடும் சொல்லப்படாத ரகசியங்களோடு மோசமாக பாதிக்கப்பட்ட நிலையிலும்
தன்னை நேசிக்கும் மக்களை கடைசியாக பார்க்க முடியாமல் அவர்களுக்கு எந்த செய்தியும் சொல்லமுடியாமல்
போராடி மரணமடைந்தது மிகுந்த துயரத்தை தருகிறது.
அவருக்கு எது நல்லதோ
அதை இறைவன் வழங்கட்டும் என்று பிரார்த்திப்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை.”
– முகஸ்டாலின்

Leave a Reply