அமெரிக்கருக்கே வேலை தரும் தமிழர்..!

சிலிகான்வேலியாகிறது திருநெல்வேலி..!

சிலிகான் வேலி கேள்விப்பட்டிருப்பீர்கள்..அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப மையமாகும். இணையத்தில், மென்பொருள் உருவாக்கத்தில்,கோலோச்சும் முக்கிய நிறுவனங்களின் துவக்க புள்ளியாகும்.அங்கு வேலைக்காக சென்ற தமிழர் ஒருவர், படிப்படியாக உயர்ந்து அமெரிக்காவின் ஆஸ்பர்ன் நகரில் சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனத்தை துவக்கி பலருக்கும் வேலைவாய்ப்பு வழங்கிவருவதோடு மட்டுமல்லாது தாம் பிறந்த மண் திருநெல்வேலியில் அத்தகைய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக “திலிகான்வேலி’ என்னும் சாட்ப்வேர் நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார் பிரபாகரன் முருகையா..நெல்லை மாவட்டத்தின் மேற்குதொடர்ச்சிமலையை ஒட்டி ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கிழஆம்பூரை சேசர்ந்தவர்.

இவரது தந்தை முருகையா, விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள மதுரா கோட்ஸ் ஆலையில் தொழிலாளியாக பணியாற்றியவர். பிரபாகரன், ஆழ்வார்குறிச்சி பரமக்கல்யாணி பள்ளியில் படிப்பை முடித்தவர்,கோவில்பட்டி இன்ஜினியரிங் கல்லூரியில் 1993ல் எலட்க்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசசன் முடித்தார்.வழக்கம்போல சென்னை, பெங்களூரு என பல்வேறு நகரங்களிலும் பல்வேறு பணிகளில் இருந்துள்ளார்.பின்னர் சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் ஒவ்வொருவரின் கனவைப்போலவே இவரும் 1998ல்அமெரிக்கா சென்றார். அங்கும் தமது திறமைக்கு தக்கபடி வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.பின்னர் கார்ப் டு கார்ப் என்ற பெயரில் ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளார்.அமெரிக்காவில் வேலைதேடுவோர், இவர்களிடம் பதிவு செய்து உடனடியாக வேலைவாய்ப்பை ஏற்படுத்திதருகிறார்.இதற்காக திருநெல்வேலியில் சில ஆண்டுகளுக்கு முன்பே தமது நிறுவனத்தை துவக்கிவிட்டார். நெல்லைமையத்தில் சுமார் 60 பேர் பணியாற்றுகின்றனர்.

இவர்கள்தான் இரவில் , அமெரிக்கரின் போன்கால்களுக்கு பதிலளித்து அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றனர்.ஒரு ஆண்டில் 30 லட்சசம் பேர் இவரது இணையசேசவையை பயன்படுத்தியுள்ளனர்.சுமார் 60 பேர் பணியாற்றும் இவரது நிறுவனத்தை ஆயிரம் பேர் பணியாற்றும் நிறுவனமாக மாற்றும்முயற்சியில் நெல்லையில் அரசு இன்ஜினியரிங் கல்லூரிக்கு அருகே திலிகான்வேலி நிறுவனத்தைதுவக்கினார்.துவக்க விழாவில் பிரபாகரன் பேசுகையில்,ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் இரண்டு நாட்கள் முக்கியமானவை.ஒன்று பிறந்த தினம்,இன்னொன்று வாழ்க்கையில் நினைத்ததை சாதித்த தினம்.அந்த வகையில் நெல்லையில் இத்தனை பொருட்செலவில் நாங்கள் இந்த நிறுவனத்தை துவக்கிய தினம்தான் என்றார். நெல்லையில் நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா, கங்கை கொண்டான் சிப்காட் வளாகம் எனஅரசாங்கங்களே பல்வேறு திட்டமிட்டும் சாப்ட்வேர் நிறுவனங்களோ, தொழில்நிறுவன ங்களோ வராத நிலையில் நீங்கள் தனிஒரு நபராக வேலைவாய்ப்பிற்காக இத்தனை பெரிய நிறுவனத்தை துவக்குவதின் அடிப்படை உந்துததல் எது என கேட்டோம்.. இப்போது டாஸ்மாக் மதுபானம் இருப்பதுபோல, நான் சிறுவனாக இருந்தபோது, “சுவர்முட்டி’ எனும் ஒரு மதுபானம் கடைகளில் விற்கப்படும். அதனை குடித்துவிட்டு அங்குமிங்குமாக உழன்றுகொண்டிருப்பார்கள்.

இவர்களுக்கு ஒழுங்காக வேலைவாய்ப்புகள் இருந்தால் இத்தகைய பாதைக்கு செல்லமாட்டார்கள் என பெரியவர்கள் கூற கேள்விப்பட்டிருக்கிறேன்..மேலும் நான் அமெரிக்காவில் இருந்தாலும் என் பேச்சின் நெல்லை தமிழ் மாறாது. நான் எப்போதும் சொந்தஊரப்பற்றியே நினைத்துக்கொண்டிருப்பேன். என்னைப்போல ஆஸ்திரேலியாவில், சிங்கப்பூரில், அமெரிக்காவில் தொழில்நடத்தும் நெல்லையை சேர்ந்தவர்களுக்கும் இத்தகைய தொழிலை நெல்லையில் துவக்க வேண்டும்என்ற எண்ணம் உள்ளது. இதனை நான் பலரிடமும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் நான் முயற்சியில் இறங்கிவிட்டேன்.இதனை கேள்விப்பட்ட ஆஸ்திரேலியா நண்பர் ஒருவர், தாம் தொழில்துவங்குவதற்காக வாங்கிப்போட்ட 50 ஏக்கர் நிலத்தை தருவதாக சொன்னார். எனவே இதெல்லாம் சொந்த ஊரின் மீதான பற்றுதல்தான் காரணம்.நெல்லையில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு சாத்தியமா..என கேட்டோம்.நிச்சயமாக சாத்தியம்தான்.. நெல்லையை சேர்ந்தவர்கள் நிறையப்பேர் பெங்களூருவில்,சென்னையில் பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலைகிடைத்தும் சூழல் பிடிக்காமல் நெல்லையில் வசிக்கின்றனர். அவர்கள் வரத்துவங்கியுள்ளனர்.

இந்த வளாகத்தில் 30 ஆயிரம் சதுரஅடியில் அலுவலகம் அமைத்துள்ளேன்.எங்கள் நிறுவனம் மட்டுமல்லாது எங்களைப்போல தொழில்துவங்க ஆர்வமுள்ள,ஆனால் இடவசதியோ, பணியாட்கள் வசதியோ இல்லாதவர்களுக்கும்இங்கு வாய்ப்பளிக்கிறோம். எனவே இதே வளாகத்தில் பல்வேறு நிறுவனங்கள் துவங்க வாய்ப்புள்ளது.

Leave a Reply