5 வருஷம் போனஸ்

மகிழ்ச்சி

ஜாக்கிங் போனால் இதயத்துக்கு நல்லது, மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம், கொழுப்பைக் குறைக்கலாம்  என்பதையெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், 5 வருடம் வாழ்நாள் அதிகமாகும் என்பது தெரியுமா?!இப்படியொரு மகிழ்ச்சியான செய்தியையே அமெரிக்காவின் Lowa state university ஆய்வு கண்டுபிடித்துத் தெரிவித்திருக்கிறது.

‘ஒருவர் வாரத்துக்கு 2 மணி நேரம் என்ற விகிதத்தில் தொடர்ந்து ஓட்டப்பயிற்சியை மேற்கொண்டிருந்தால் அவருடைய வாழ்நாள் 5 வருடங்கள் அதிகரிக்கிறது’ என்பதை குறிப்பிட்டிருக்கிறார் ஆய்வை மேற்கொண்ட லோவா பல்கலைக்கழக தலைமை விஞ்ஞானியான Duck-chul Lee. இதில் முக்கியமான ஒரு விஷயம்…

புகைப்பழக்கம் உள்ளவர்கள், மது அருந்துபவர்கள், உடல் பருமன், ரத்தக்கொழுப்பு போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கும் பலன் தரக்கூடிய அளவு பவர்ஃபுல்லானது ஜாக்கிங். காரணம், ஓட்டப்பயிற்சியை மற்ற எந்த உடற்பயிற்சிகளோடும் ஒப்பிடவே முடியாது என்று ஜாக்கிங்கின் பெருமையைக் குறிப்பிடுகிறது லோவாவின் ஆய்வு.3 வருடங்களாக, நூற்றுக்கணக்கானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வை Cooper institute in dollas என்கிற இன்னோர் பல்கலைக்கழகமும் வழிமொழிந்திருக்கிறது. தினசரி 5 நிமிடங்கள் ஓட்டப்பயிற்சியை மேற்கொண்டால்கூட போதுமானதே என்கிறது கூப்பர் பல்கலைக்கழகம்.அப்புறம் என்ன… ஜாக்கிங் கிளம்ப வேண்டியதுதானே!

– இந்துமதி

Leave a Reply