​முதுகு வலியிலிருந்து விடுபட 

​முதுகு வலியிலிருந்து விடுபட அனாஹத சக்கர சுத்தி


பயன்கள்:

முழங்கை மூட்டுகள், மணிக்கட்டுகள், கைகள், புயங்கள் வலுப்பெறுகின்றன. இதயம் மற்றும் நுரையீரலுக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கிறது.முதுகெலும்புகளில் தேய்மானம், வலி (back pain), கூன் முதுகு, முதுகு தண்டுவட விலகுதல் (disc prolapse) போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது.
பயிற்சி-1

மெதுவாக மூச்சை உள் வாங்கிக் கொண்டு கைகளை தோள்பட்டை அளவிற்கு முன்புறமாக உயர்த்த வேண்டும். அந்நிலையில் கவனத்தை அனாஹத சக்கரத்தில் (மார்புப் பகுதியில்) செலுத்தி 6 முறை ஆழமாக சுவாசிக்கவும்.
பயிற்சி-2

பின்பு மெதுவாக கைகளை தலைக்கு மேல் உயர்த்த வேண்டும். முதுகுத் தண்டு நேராக இருக்கவேண்டும். கவனத்தை அனாஹத சக்கரத்தில் செலுத்தி 6 முறை ஆழமாக சுவாசிக்கவும்.
பயிற்சி-3

பின்பு மெதுவாக கைகளை கீழே இறக்கி தோள்பட்டைக்கு நேராக பக்கவாட்டில் நீட்ட வேண்டும். கவனத்தை அனாஹத சக்கரத்தில் செலுத்தி 6 முறை ஆழமாக சுவாசிக்கவும்.
பயிற்சி-4

நின்ற நிலையில் மெதுவாக கைகளை பின்புறமாக நீட்டவும். கவனத்தை அனாஹத சக்கரத்தில் செலுத்தி 6 முறை ஆழமாக சுவாசிக்கவும்.
பயிற்சி-5

இரு கைகளையும் பின்புறமாக கோர்த்துக் கொண்டு மேல் நோக்கி கைகளை உயர்த்த வேண்டும். முதுகு தண்டு நேராக இருக்கவேண்டும். அனாஹத சக்கரத்தில் கவனத்தை செலுத்தி 6 முறை ஆழமாக சுவாசிக்கவும்.

Leave a Reply