​டெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு குடிநீர் – எப்படி குடிக்க வேண்டும் தெரியுமா?

🔔🔔🔔
நிலவேம்பு குடிநீர் இன்றைக்கு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் அருமருந்தாக உள்ளது. தமிழகம் முழுவதும், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களில் நிலவேம்பு குடிநீர் அளிக்கப்படுகிறது.

நிலவேம்பு பொடி என்பது நில வேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், பேய் புடல், பற் படாகம், சுக்கு, மிளகு, கோரைக் கிழக்கு போன்றவை சேர்ந்த பொடியாகும்.

5 கிராம் முதல் 10 கிராம் அளவு நிலவேம்பு பொடியை 200 மிலி தண்ணீரில் போட்டு 50 மிலி அளவுக்கு சுண்டும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

அப்போதுதான் காய்ச்சலை குணப்படுத்துவதற்கான வேதிப்பொருட்கள் தண்ணீரில் கலந்து மருந்தாக மாறும். அதன்பின் கசாயத்தை வடிகட்டி குடிக்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் காலை, மதியம், இரவு என 3 வேளையும் குடிக்க வேண்டும்.

தலையில் நீர் கட்டுதல், தலைவலி, தும்மல், இருமல் போன்றவற்றையும் குணப்படுத்தக்கூடியது. தைராய்டு, கர்ப்பப்பைக் கட்டிகளையும் நிலவேம்பு குணப்படுத்தும். காய்ச்சல் குறைந்த பிறகு கசாயம் குடிப்பதை நிறுத்திவிடலாம். அதன்பின் குடித்தாலும் தவறு ஒன்றும் இல்லை.

   

🔬

நிலவேம்பு குடிநீரின் பயன்கள்:

நிலவேம்பு கசாயம் டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவதுடன் உடலில் ரத்த தட்டணுக்களையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக் கிறது. சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. நிலவேம்பு பொடியை வெந்நீரில் கலந்து குடிப்பதும், நேரடியாக வாயில் போட்டு விழுங்குவதும் கூடாது. அதனால் எந்த பலனும் இல்லை. காய்ச்சலும் குணமாகாது.

   

.

காய்ச்சலை கட்டுப்படுத்தும் சுக்கு:

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்பார்கள். நிலவேம்புக் குடிநீர் பொடியில் உள்ள சுக்கு வலிநீக்கியாக செயல்படுகிறது. சளி, காய்ச்சல் தொந்தரவுகளை நிக்கும். நிலவேம்புக் குடிநீர் பொடியில் மிளகுக்கும் ஓர் இடம் உண்டு. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துகளும் தயாமின், ரிபோபிளேவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன.

நிலவேம்புக் குடிநீர் பொடியுடன் வெட்டிவேரும் சேர்க்கப்பட்டுள்ளது. இது குளிர்ச்சி தருவதுடன் நறுமணம் மற்றும் உற்சாகத்தைத் தரக்கூடியது. சந்தனமும் காய்ச்சலுக்கு அருமருந்தாகச் செயல்படுகிறது.

   

🔬

குளிர்ச்சி தரும் கிழங்குகள்:

கோரைக் கிழங்கு சிறுநீர், வியர்வையைப் பெருக்குவதுடன் உடல் பருமனைக் குறைக்க உதவும். பேய்ப்புடல் காய்ச்சலைத் தணிக்கக்கூடியது. விலாமிச்சை வேர் மணமுள்ளது மட்டுமல்ல மிகவும் குளிர்ச்சி நிறைந்தது.

சர்க்கரை நோயாளிகள் நிலவேம்பு கசாயத்தை குடித்தால், சர்க்கரையின் அளவு குறைந்து பாதிப்பை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. அது தவறான தகவல். சித்த மருந்து எப்போதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. சர்க்கரை நோயாளிகளும் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம். எந்த பாதிப்பும் இருக்காது. காய்ச்சல் குணமாகும். சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும் என்பது சித்த மருத்துவர்களின் அறிவுரையாகும்.

Leave a Reply