வெண்ணெய்

பொதுவாகத் தங்கள் உடல்நலத்தில் மிகவும் கவனமாக இருப்பவர்கள் அதிகமாக வெண்ணெய் சேர்த்துக்கொள்ளாமல் தவிர்ப்பார்கள். ஆனால் வெண்ணெயிலும் சத்துகள் அடங்கியுள்ளன. மலைப் பகுதி மக்களுக்குக் அதிகமாகக் கடல் உணவுகள் கிடைப்பதில்லை.  அதனால் ஏற்படும் அயோ டின் இழப்பை வெண்ணெய் ஈடுகட்டுகிறது. வெண்ணெய்யில் உள்ள `ஆன்டி ஆக்சிடன்ட் கள்’ ரத்த நாளங்களைப் பலப்படுத்துகின்றன. கால்சியத்தை அதிகளவில் கொண்டுள்ள வெண்ணெய், பற்சிதைவைத் தடுக்கிறது. வெண்ணெய்யில் உள்ள பூரிதக் கொழுப்பு, புற்று நோயைத் தடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. தேவையான தாது உப்புகளை உடம்பு கிரகித்துக்கொள்ள வெண்ணெய் உதவுகிறது. வெண்ணையில் உள்ள `கொலஸ்ட்ரால்’, மூளைக்கும், நரம்பு மண்டலத்துக்கும் நன்மை பயக்கிறது. இதில் உள்ள `வைட்டமின் ஏ’, கண்கள் மற்றும் தோலின் நலத்தை காக்கிறது.

Leave a Reply