முருங்கைப் பூ

‘முருங்கைப் பூ’:-

——————
முருங்கையை உணவிற்கு பயன்படுத்தும் போது பலரும் முருங்கை பூவை ஒதுக்குவதுண்டு. ஆனால் அதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இயற்கை நமக்களித்த ஓர் வர பிரசாதம் ‘முருங்கைப் பூ’ என்றே கூறலாம். இதன் மகிமைகளை கீழே காண்போம்.
* முருங்கைப் பூவை உணவில் சேர்த்து கொள்வதால் சளி தொந்தரவு நீங்கும்.
* மேலும் முருங்கைப் பூ தலைவலியைக் குறைக்கும், கால் வலி, கழுத்து வலியையும் குறைக்கும் தன்மை இந்த பூவுக்கு உண்டு.
* முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
* பித்தமுள்ளவர்கள் முருங்கைப் பூவை உணவில் அதிகம் எடுத்துகொள்ள வேண்டும். இதனால் உடலில் உள்ள பித்த நீர் குறையும்.
* நரம்பை வலிமைப்படுத்தும் தன்மை முருங்கைப்பூவிற்கு உண்டு. தொடர்ந்து முருங்கை பூவை உண்டு வந்தால் நரம்பு தளர்ச்சி முற்றிலும் குணமடையும்.
* உடல் சூட்டினை தணிப்பதற்கு முருங்கைப்பூ பயன்படுத்தப்படும். முருங்கைப்பூவை கஷாயமாக்கி சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.
* பெண்களின் உதிரப்போக்கு பிரச்சனைக்கு முருங்கைப்பூவை நன்றாக அரைத்து சாப்பிட்டால் உடனடியாக அப்பிரச்சினை அகலும்.
* உடலில் உஷ்ணம் அதிகரிப்பதால் ஏற்படும் கண் எரிச்சல், கண்ணீர் நீர் வடிதல் போன்ற கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு முருங்கைப்பூ ஓர் நல்ல மருந்து.
மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ள‍வும்.

Leave a Reply