மழைக்காலம்

மழைக்காலங்களில் கொசு, பூரான், வண்டு மற்றும் சிறுபூச்சிகளின் தொல்லைகள் அதிகம் இருக்கும் என்பதால் கூடியமட்டும் மாலை சுமார் 5 மணி அளவில் வீடுகளின் கதவுகளை மூடி வைப்பது நல்லது. மேலும் நொச்சி, வேம்பு போன்ற இலைகளை வீட்டுக்கு வெளியே தீயிட்டு கொளுத்தி புகைமூட்டம் போடுவதால் கொசுக்களின் தொல்லை இருக்காது.

வீடுகளின் உள்ளே கற்பூரம் கொளுத்துவது, படுக்கையைச் சுற்றி பூண்டுப் பற்களை நசுக்கி வைப்பது, மஞ்சள் நீர் தெளிப்பது போன்றவை பூச்சிகளின் தொந்தரவில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் தலையணையின் அடியில் வெள்ளைப்பூண்டை உரித்து வைத்து தூங்கினால் நிம்மதியான உறக்கம் வரும்.

அதேபோல் இரவு உணவு முதல் கவளம் எடுக்கும்போது உப்பு சேர்த்து வேக வைத்த சின்ன வெங்காயத்தைச் சாப்பிடுவதன் மூலம் நிம்மதியான உறக்கம் வரும்.

பகல் வேளைகளில் சப்போட்டா பழங்களைச் சாப்பிட்டாலும் இரவில் நிம்மதியான தூக்கம் வரும். இவைதவிர மழைக்காலங்களில் நாம் தண்ணீர் அதிகமாக அருந்துவதில்லை. ஆகவே மறக்காமல் தண்ணீர் அருந்துங்கள். இதனால் மலச்சிக்கல் வரும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மலச்சிக்கல் வந்தாலும் அவ்வப்போது காய்ந்த திராட்சைப்பழங்கள், கொய்யாப்பழம், பப்பாளி போன்றவற்றைச் சாப்பிட்டு நிவாரணம் பெறலாம்.

Leave a Reply