பெண் குழந்தைகளை பெற்றெடுக்க

பெண்கள் சாப்பிடும் உணவு வகைகளை பொறுத்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆணா அல்லது பெண்ணா என நிர்ணயிக்கப்படுகிறது என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் 80 சதவிகிதம் பேர் பெருமளவில் பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். கர்ப்பம் அடைவதற்கு சில வாரங்களுக்கு முன்பு கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகிய சத்துகள் நிறைந்த பச்சைக் காய்கறிகளை தங்களது உணவில் எடுத்துக் கொண்ட பெண்கள் பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதே வேளையில் பொட்டாசியம் மற்றும் சோடியம் சத்துகள் நிறைந்த வாழைப்பழம் மற்றும் உருளைக் கிழங்கு போன்றவற்றை உணவில் சேர்த்து கொண்டவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது என ஆய்வில் தெரிய வருகிறது.

Leave a Reply