பூம்பாலை

​கர்ப பை பிரச்சனை தீர்க்கும் தென்னம் பூ (பூம்பாலை)…
தென்னை மரத்தின் பூ சாப்பிடுவதற்கு

துவர்ப்பாக இருக்கும். 
அதிக ரத்தப் போக்கு இருக்கும் பெண்கள்,

காலையில் வெறும் வயிற்றில் தென்னம் பூவைச் சாப்பிட்டு,உடனே பால் குடித்து விட வேண்டும். 
இரண்டு மணி நேரம் கழித்து, 

காலை உணவைச் சாப்பிடலாம். 
மாதவிலக்கு ஆகும் சமயத்தில், மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், அதிக ரத்தப்போக்கு கட்டுப் படும்.மேலும், கர்ப்பப்பை பிரச்னைகளைச் சரிப் படுத்தும்.

வெயில் காலத்தில் ஏற்படும் கடுப்புக் கழிச்சல் எனப்படும் வயிற்று வலி. இதனால்,சிலருக்கு 

மலம் கழிக்கும் போது, ரத்தம் கூட வரலாம். இதற்குத் தீர்வாக,தென்னம் பூச்சாறு, தயிர் –தலா 100 மி.லி, அரை எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றைக் கலந்து குடித்தால், வயிற்று வலி குறைந்து, 

மலம் கழிப்பது சுலபமாகும். ரத்தம் வெளியேறுவதும் நிற்கும்.
தென்னம் பூ, களர்ச்சிக்காய்,

நெருஞ்சி முள் ஆகியவற்றை 20 கிராம் அளவுக்குச் சம அளவில் எடுத்து, 100 மி.லி ஆட்டுப் பாலில் வேக வைத்து,உலர்த்திப் பொடியாக்கி, 48 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வர,விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
“என் மக்கள்” 

கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…

Leave a Reply