புதினா

கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போல   புதினாவும் உணவுக்கு   சுவையும்  மணமும்  தர   பயன்படுத்தப்படுகிறது. புதினா பசியைத் தூண்டும் சக்தி கொண்டது.
பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகள் தீர புதினா   மிகவும்  உதவுகிறது.  ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக் களை அழிக்கவும்  வாய்வுத் தொல்லையை போக்கவும்  புதினா  உதவுகிறது    புதினாவில்   உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில்   இதில் இருக்கின்றன.
புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். ஆஸ்துமாவை புதினா கட்டுப்படுத்து கின்றது.  வறட்டு இருமல்,  ரத்தசோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினா குணப் படுத்துகிறது.   புதினாவை  தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும்.சீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும்.வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் புதினாவை  துவையல்  செய்து   சோற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

Leave a Reply