பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டால் நுரையீரல் புற்றுநோய்

வகையான பழங்கள், காய்கறிகளை தினமும் சாப்பிட்டால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து குறைவு என அணு ஆய்வு கூறுகிறது. குறிப்பாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அவசியம் பழம் சாப்பிட வேண்டும் என்கிறது அந்த ஆய்வு.

நெதர்லாந்தின் தேசிய பொது சுகாதார, சுற்றுச் சூழல் நிறுவனத்தின் புற்று நோயியல் திட்ட இயக்குநர் எச்.பஸ் பியூ னோ டி மஸ்கிட்டா தலைமையிலான குழுவினர் புற்றுநோயைத் தடுப்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 4.52 லட்சம் பேரிடம் புகைப் பழக்கம், பழம், காய்கறிகள் சாப்பிடும் பழக்கம் உள்பட பல்வேறு தகவல்களை சேகரித்தனர்.

இதில் 1,613 பேர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்தது கண்டறியப்பட்டது. ஆரோக்கியமாக இருந்தவர் களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகளை தினமும் சாப்பிடாதவர்களை விட சாப்பிட்டவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து குறைவாக இருந்தது. மேலும் புகைப்பழக்கம் உள்ளவர்களில் பழம், காய்கறிகளை சாப்பிட்டவர்களை விட சாப்பிடாதவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிக அளவில் இருந்தது. பழங்கள், காய்கறிகளில் பல்வேறு வகையான நோய்க் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் இருக்கிறது. இதனால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.

ஏற்கெனவே நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் புற்றுநோய் செல்கள் வேகமாக பரவாது. குறிப்பாக புகைப்பழக்கம் உள்ளவர்கள் இதை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் புகைப்பழக்கத்தை முற்றிலும் கைவிடாவிட்டால் தப்ப முடியாது என மஸ்கிட்டா தெரிவித்துள்ளார்.

Leave a Reply