தசைப்பிடிப்புகள் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையா

தற்போது பலருக்கும் எலும்புகள் மற்றும் தசைகள் பலவீனமாக உள்ளது. இதனால் அடிக்கடி தசைப்பிடிப்புக்கள் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏராளமான மக்கள் சந்திக்கின்றனர்.

நீங்களும் அடிக்கடி தசைப்பிடிப்புகள் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்பட்டால், அதற்காக பல மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு அலுத்துப் போயிருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு அற்புத பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்.
செய்முறை #1
முதலில் ஒரு சிறிய கட்டு பசலைக்கீரையை எடுத்துக் கொண்டு, நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
செய்முறை #2
பின் 5-6 பாதாம் பருப்புக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #3
பின்பு 1/2 கப் ஓட்ஸை எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #4
அடுத்து 1/2 கப் அன்னாசிப் பழத் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #5
இறுதியில் ஆளி விதைகளை சிறிது எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #6
மிக்ஸியில் அனைத்து பொருட்களையும் போட்டு, 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொண்டால், பானம் தயார்.
நன்மைகள்:-
இந்த பானத்தில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளது. இந்த பானத்தை எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் குடித்து வர, பிரச்சனைகள் நீங்குவதோடு, தசைப் பிடிப்புக்களும் நீங்கும்.

Leave a Reply