ஜலதோஷம் வராது!

வழக்கமான தண்ணீர் மாறுபட்டாலோ, தட்பவெப்ப நிலை சற்று மாறினாலே எளிதில் ஒட்டிக்கொள்வது தடுமன் தான். மாத்திரை சாப்பிடுவது, ஊசி போட்டுக் கொள்வது, `ஆவி’ பிடிப்பது என்று இதை விரட்ட ஒரு போராட்டமே நடத்துகிறோம். அமெரிக்க உறக்கவியல் மருத்துவ வல்லுநர்களோ, இது சாதாரண ஒன்றுதான் என்று கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள். தடுமன் பாதிப்பு இருப்பவர்கள் நன்றாக 8 மணி நேரம் தூங்கி எழுந்தாலே போதும். தும்மலும் வராது. அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு தகுந்த தீர்வும் பெறலாம் என்கிறார்கள் அவர்கள். அதேநேரம், தினமும் 8 மணி நேரத்திற்குக் குறைவாக தூங்குவோருக்கு தடுமன் வரும் வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply