சரும வகைகளிலேயே எண்ணெய் பசை

சரும வகைகளிலேயே எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் ஏராளமான சரும பிரச்சனைகள் வரும். அப்படி எண்ணெய் பசை சருமத்தினர் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் முகத்தில் மேடு பள்ளங்களாக இருப்பது. இது சருமத் துளைகள் திறக்கப்பட்டு, மீண்டும் மூடாமல் இருப்பதால் ஏற்படுவதாகும். சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை குறைக்க சில இயற்கை வழிகள்!!! இப்படி ஒருவரது முகத்தில் மேடு பள்ளங்கள் இருந்தால், அது அவரது முக அழகையே கெடுத்துவிடும். மேலும் முகத்தில் இருக்கும் குழிகளை மறைக்க என்ன தான் கண்ட க்ரீம்களைப் பயன்படுத்தினாலும், அது தற்காலிகமே தவிர நிரந்தரம் அல்ல என்பதை மறவாதீர்கள். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சாப்பிட வேண்டியவைகள் மற்றும் சாப்பிடக்கூடாதவைகள்! முகத்தில் இருக்கும் மேடு பள்ளங்களை மறைக்க ஒரு பொருள் உதவும். அது தான் எலுமிச்சை. எனவே இங்கு தமிழ் போல்ட் ஸ்கை முகத்தில் இருக்கும் மேடு பள்ளங்களை மறைக்க உதவும் எலுமிச்சையைக் கொண்டு எப்படியெல்லாம் முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம் என கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மை பெறுங்கள். முகத்தில் இருக்கும் மேடு பள்ளங்களை மறைப்பது எப்படி?1/6 ஃபேஸ் பேக் #1 சிறிது வெள்ளரிக்காயை எடுத்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர், சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படி அடிக்கடி செய்து வர முகத்தில் இருக்கும் குழிகள் மறையும். ஃபேஸ் பேக் #2 2 முட்டையின் வெள்ளைக்கருவில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் குளிந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால், இறந்த செல்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை நீக்கப்படுவதோடு, சருமத்துளைகளும் சுருங்கும் ஃபேஸ் பேக் #3 தக்காளி சாற்றில், 2-4 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசை நீக்கப்பட்டு, சருமத் துளைகள் அடைக்கப்பட்டு சுருக்கப்படும். ஃபேஸ் பேக் #4 சிறிது பாதாமை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் ஃபேஸ் பேக் #5 பாதி எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் 1/2 கப் அன்னாசி சாறு சேர்த்து கலந்து, காட்டன் துணியை அந்த கலவையில் நனைத்து முகத்தின் மேல் வைத்து 5 நிமிடம் கழித்து, முகத்தில் நீரில் கழுவ வேண்டும். இதனால் அன்னாசியில் உள்ள நொதிகள் சருமத்தை சுத்தம் செய்வதோடு, சருமத்துளைகளை இறுக்கவும் செய்யும். ஃபேஸ் பேக் #6 இந்த ஃபேஸ் பேக்கில் எலுமிச்சை சாறு தேவையில்லை. ஏனெனில் இதில் அதற்கு இணையான பேக்கிங் சோடா உள்ளது. இந்த ஃபேஸ் பேக்கிற்கு 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்

Leave a Reply