கொய்யா

• பழுத்த கொய்யாப்பழத்துடன் மிளகு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் சோர்வு மற்றும் பித்தம் நீங்கும்.
 

 • கொய்யாப்பழத்துடன் சப்போட்டா பழத்தைச் சேர்த்து, அதில் தேன் கலந்து சாப்பிட்டால், உடல் வலுப்பெறும். ரத்தம் சுத்தமாகும்.

 

 • மதிய உணவிற்குப் பின் கொய்யாப்பழம் சாப்பிட்டால், உடல் வலுப்பெறுவதோடு ரத்தமும் சுத்தமாகும். ஜீரணம் எளிதாகும். மலச்சிக்கல் அறவே நீங்கும். வயிற்றுப் புண் குணமாகும்.

 

 • ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியும், மூட்டு வலி, மூல நோய், சிறுநீரகக் கோளாறு உட்பட பல நோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் உண்டு.

 

 • கொய்யா இலைகளைச் சந்தனத்துடன் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் கடுமையான தலைவலி, மற்றும் ஒற்றைத் தலைவலி நீங்கும்.

 

 • கொய்யாப்பழத்தில் அமிலத்தன்மை அதிகமிருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது

Leave a Reply