கிட்ணியில் கல் கரைய

கிட்ணியில் கல் கரைய எளிய வைத்தியம் :

பொங்கல் பூ எனப்படும் பூளைப் பூ சாறு.
கோவையில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நண்பருக்கு இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி. கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு என்ன செய்வது என்று நான் தங்கியிருந்த வீட்டின் மாடிப் படியில் உட்கார்ந்திருந்தார்.
பக்கத்து வீட்டுப்பாட்டி சலம் கழிக்க வந்தார். ஏன் இங்க உட்கார்ந்திருக்க என்று விவரம் கேட்டார். அவர் வேதனையைக் குறிப்பிட்டார். உடனே பொங்கலுக்குக் காப்பு கட்டியிருந்த கொத்தில் பூளைப் பூவை மட்டும் உருகி சுடு நீரில் காய்ச்சி வடித்துக் கொடுத்தார். 
“இந்தா இதக்குடி . அரை மணி நேரத்துல சரியாகிடும்” என்று கொடுத்தார். கால் மணி நேரத்திலேயே வலி குறைந்தது. 
காலையில் ஸ்கேன் செய்து பார்த்தார் நண்பர் 8mm கல் இருந்தது. மருத்துவர் ஆபரேசன் பண்ண வேண்டுமென்று தற்போதைக்கு மாத்திரை சாப்பிடுமாறு கூறினார். அவர் மாத்திரை வாங்கவே இல்லை. 
பூளைப்பூ வைத்தியத்தைத் தொடர்ந்தால் என்ன என்று மனதிற்குத் தோன்றியது. தினமும் குடிக்கும் அளவு தண்ணீரை எடுத்து அதில் கைப்பிடிப் பூளைப்பூவைப் போட்டு காய்ச்சி 6 அல்லது 7 நாள் குடித்திருப்பார். வலி சுத்தமாகக் காணாமல் போயிருந்தது. மறுபடியும் ஸ்கேன் செய்து பார்த்தார் 3mm மட்டும் இருந்தது. மறுபடியும் 5 நாட்கள் தொடர்ந்தார் சிறுநீரகக் கல் இல்லாமல் போனது. 
பாட்டியின் வழி காட்டுதலால் ஆபரேசனில் இருந்து தப்பித்து விட்டார். அதிலிருந்து வாரம் ஒருமுறை பூளைப்பூவில் கருப்பட்டி போட்டு டீ போல வைத்துக் குடித்துக் கொள்வதென செய்து வருகிறார்.
பிறகுதான் தோன்றியது. காப்புக் கட்டும் நம் மரபு என்பதே தற்காப்பிற்காகத்தான் என்று…
பயன் படுத்துங்கள்.

மற்றவர்களையும் பயன் பெற செய்யுங்கள்.

பகிருங்கள்.
🙏வாழ்க வளமுடன்🙏
“என் மக்கள்” 

கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…

One comment

  1. நன்மையே,
    பூளைப்பூவை எங்கு கிடைக்கும் என்ன விலை என்பதை முழு விலாசத்தை போன் நம்பருடன் தெரிவிக்கவும்

Leave a Reply