கள்ளிச் செடிகள்

கள்ளிச் செடிகள்….
??????????
வறண்ட பகுதியில் செழித்து வளர்ந்து காணப்படும் ஒருவகை தாவரம்தான் சப்பாத்திக் கள்ளி. இது ஒரு பாலைவனத் தாவரம். கள்ளிச் செடிகள் பலவகையுள்ளது. திருகுகள்ளி, இலைக்கள்ளி, சதுரக்கள்ளி, மண்டங்கள்ளி, சப்பாத்திக்கள்ளி.

இந்தச் செடிகளில் மற்ற செடிகள்போல் இலைகள் கிடையாது. இதன் தண்டுகள் வட்டவடிவில் ஒன்றுடன் ஒன்று இனைந்து எல்லா இடத்திலும் முட்கள் நிறைந்து இருக்கும். எளிதில் தாவரங்களை உண்ணும் பிராணிகளிடமிருந்து தப்பிக்க யாரும் நெருங்க முடியாதபடி பாதுகாப்பாக இருக்கும். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தனக்குத்தானே அந்தத் தாவரம் போட்ட வேலிதான் முட்கள். இந்தச் செடிகள் எல்லாமே பாலைவனத் தாவரங்கள். இதனால் இலையில் இருக்கின்ற தண்ணீர் முழுவதும் பாலைவனச் சூட்டில் ஆவியாகி வெளியேறிவிடும். எனவேதான் கள்ளித் தாவரங்கள் தண்டிலேயே நீரைத் தேக்கி வைத்திருக்கும். அதேபோல இலைகள் செய்ய வேண்டிய உணவுத் தயாரிப்பையும் தண்டுகளே செய்து கொள்கிறது.

இதனுடைய பூ மிகவும் அழகாயிருக்கும். பழம் சிவப்பு நிறத்தில் இருக்கும். மிகவும் சுவையாக இருக்கும். பழங்களை பறித்துச் சாப்பிடுவது அவ்வளவு எளிதல்ல. முதலில் முட்கள் எதுவும் கையில் குத்தாமல் பழத்தை பறிக்க வேண்டும். பறித்தவுடன் எல்லாப் பழங்களையும் போல் சாப்பிட முடியாது. பழங்களின் தோலைச் சுற்றிலும் மிக நுண்ணிய முட்கள் இருக்கும் அதை தேய்த்து நீக்க வேண்டும். பழத்தை இரண்டாக பிளந்தால் அதன் நடுவில் வட்டமாக ஒரு முள் இருக்கும். இந்தப் பழத்தை மிகவும் கவனமாகச் சாப்பிட வேண்டும் இல்லையென்றால் ஆபத்து. அதனால் இதை யாரும் எளிதில் நெருங்குவதற்கு பயப்படுவார்கள்.

மாவுப்பூச்சிகள் நம் ஊரிலுள்ள சப்பாத்திக்கள்ளிகளை அழிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. சப்பாத்திக்கள்ளி ஒழிந்து விட்டது. ஆனால் இந்தப்பூச்சிகள் ஒழியவில்லை. இந்தப்பூச்சி அவைகள் சாப்பிடுவதற்கு சப்பாத்திக் கள்ளிகள் இல்லாததால் எல்லாவற்றையும் சாப்பிட ஆரம்பித்துவிட்டன.

இதுபோல் நமது இயற்கை வளங்களை அழிப்பதற்கு நிறைய விஷச்செடிகள் மறைமுகமாக இறக்குமதியாகி உள்ளது. இயற்கை இயல்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவோம்…
?
இலைக்கள்ளி:
மூலிகையின் பெயர் – இலைக்கள்ளி
தாவரப்பெயர் – EUPHORBIA LIGULARIA
தாவரக்குடும்பம் – EUPHORBIACEAE
பயன்தரும் பாகங்கள் – இலை, பால், வேர் மற்றும் பழம்.

வளரியல்பு – இலைக்கள்ளி கள்ளி வகைகளின் ஒரு வகை. இது எல்லாவித மண் வளங்களிலும் வளரும் தன்மையுடையது. இது வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடியது. இது நேராக வளரக்கூடியது. சுமார் ஆறு அடி முதல் பன்னிரண்டடி உயரம் வளரக் கூடியது. இது ஒரு சிறு மரவகை இனம். இதன் தண்டுகள் பச்சையாக இருக்கும். இலைகள் முயல்காது போல் பச்சையாக இருக்கும். எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலை தடிப்பாக இருக்கும். பூ சிகப்பாக மலர்ந்து முக்கோண வடிவில் சிறிய காய்கள் விடும். ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். இதை உயிர் வேலிகள் அமைக்கப் பயன்படுத்துவார்கள். இதன் பால் பட்டால் புண்ணாகிவிடும். கால் நடைகள் இதன் இலையைத் தின்னாது. இந்தியாவிலும் மலேசியாவிலும் அதிகமாகக் காணப்படும். தென் இந்தியாவில் அதிகம் பயன்படுத்துகறார்கள். நேபால், சியாம், பர்மா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் வளர்க்கப்படுகிறது. விதைமூலம் இன விருத்தி செய்வதை விட கிளையை வெட்டி நடுவதன் மூலம் விரைவில் வளர்கிறது.

மருத்துவப் பயன்கள்:
இலைக்கள்ளிக்கு மற்ற கள்ளிக்குள்ள குணங்கள் யாவும் இதற்கும் உண்டு. இலைக்கள்ளி சிறந்த மருத்துவ குணமுடையது. இதனால் காது சம்பந்தமான நோய்கள் குணமாகும். பாம்புக் கடிக்குச் சிறந்த மருந்து. நோய் எதிர்ப்பு சக்தியாகவும் பயன்படுகிறது. மற்றும் ஆஸ்த்துமா, இருமல், காதுவலி, பூச்சிக் கொல்லி, மூலம், மூட்டுவலி, காச்சல், இரத்தசோகை, குடல்புண், தோல் நோய், மலச்சிக்கல், மஞ்சக்காமாலை, வாதம், கட்டி, சிறுநீர் தடை போன்ற நோய்களையும் குணப்படுத்துகிறது.

இலைக்கள்ளி வேருடன் வெங்காயம் வைத்து அரைத்து அதை குழந்தைகளின் அடிவயிற்றில் பூசினால் குடல்புழு கழியும்.

இலைக்கள்ளி சாற்றுடன் இஞ்சி சார் கலந்து நன்றாகச் சூடு செய்து பதம் வந்தபின் இரக்கி ஆறவைத்து வாதம் உள்ள இடத்தில் பூசினால் குணமடையும்.

இலைக்கள்ளிப் பாலுடன் மஞ்சள் பொடி சேர்த்து மூலத்திற்குப் பயன்படுத்துவார்கள்.

?
இரணகள்ளி:
.

வளரியல்பு – கள்ளி இனங்ளில் 2008 வகைகள் உள்ளன. கால்நடைகள் சாதாரணமாக இதைக் கடித்துச் சாப்பிடுவதில்லை. கள்ளிகள் பலவிதமான தோற்றங்கள், சிறு செடிமுதல் மரம் வரை வளரக்கூடியவை. பல வண்ண மலர்களுடன் காணப்படும். அழகுக்காக எல்லா நாடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இதன் தோற்றம் சங்க காலத்திலும், ஜீலிசீசர் காலத்திலும் இருந்துள்ளது. அதனால் காலம் நிர்ணியிக்க முடியவில்லை.

கள்ளி இனங்களில் இந்த இரணகள்ளி செடியாக வளரும் இனம். இதன் இலைகள் ஆலமரத்து இலை போன்று, ஆனால் சற்று தடிப்பாக இருக்கும். இலையைக் கிள்ளி ஈரமான இடத்தில் போட்டால் அங்கும் செடி உண்டாகும். இது வரண்ட சமவெளிகளிலும் மலைகளிலும் தன்னிச்சையாக வளரக்கூடியது. தண்ணீரோ மழையோ தேவையில்லை.. காற்றிலுள்ள நீரைக் குடித்தே இது செழிப்பாக வளரும். இதன் இலை உடம்பில் பட்டால் சிவந்து தடித்து விடும். இரணகள்ளி இலை மூலமும், விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும்.
..
மருத்துவப்பயன்கள்:
இரணகள்ளி- பொதுவாக நீர் மலம் போக்கும், வாந்தி உண்டாக்கும், தடிப்புணாட்டாக்கும் செய்கையுடையது. கள்ளி இனங்களான கொம்புக்கள்ளி, கொடிக்கள்ளி, சதுரக்கள்ளி, திருகுக் கள்ளி என்ற கள்ளியின்னங்களுக்கு என்ன செய்கை உண்டோ, அதே செய்கை இதற்கும் உண்டு. ஆனால் இந்த இரணக்கள்ளி செடியில் பால் இராது.

இரணக் கள்ளி இலையை இடித்துச் சாறு பிழிந்து அந்த சாற்றில் இரு துளி வென்னீரில் கலந்து உள்ளுக்குக் கொடுத்த பின்னர், தேள் கொட்டின கடிவாயில் மேல்படி இலையை அரைத்து வைத்துக் கட்டி விட தேள்கடி நஞ்சு இறங்கப் போகும்.

இரணக்கள்ளி இலைக்கு இரணத்தை ஆற்றும் சக்தியுண்டு. இந்த இலையை மை போல் அரைத்து, அறாத இரணத்தின் மேல் வைத்து அதன் மேல் ஒரு வெற்றிலையை வைத்துக் கட்டி வந்தால், நாளவட்டத்தில் படிப்படியாக இரணம் ஆறும்.

இரணகள்ளிச் சாற்றை மரு, பாலுண்ணி, கால் ஆணி, சொர சொரப்பான மருக்கள் பேரில் இரவில் தடவி வைத்துக் காலையில் கழுவி விடவேண்டும். இந்த விதமாக தினசரி, பாலுண்ணி, மரு மறையும் வரைத் தடவி வர வேண்டும்.

மூன்று இரணகள்ளி இலையை அம்மியில் வைத்து அரைத்து, ஒரு புதிய சட்டியில் போட்டு தேக்கரண்டியளவு மிளகு, அரைத் தேக்கரண்டியளவு சீரகம் இவைகளையும் அரைத்துப் போட்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் கபவாத சம்பந்தமான நோய்கள் சன்னி ரோகம், நரம்புச் சிலந்தி, நளிர் வாத நோய்கள் ஆகியவை குணமாகும்.

இரணக்கள்ளி செடியைக் கொண்டு வந்து வீட்டில் உயரத்தில் கட்டி வைக்க கொசுக்கள் இதன் வாடையால் வீட்டில் தங்காமல் ஓடிவிடும்.

இரணக் கள்ளி இலையை இடித்துச் சாறு பிழிந்து அரைக் கிலோ பசு வெண்ணையுடன் 500 மில்லி சாறு சேர்த்து நெய் காய்ச்சி எடுதுக்கொண்டு, அந்த நெய்யை பிரண்டைத் துவையல் சோற்றுடன் கலந்து அதில் மேல்படி நெய்யை உருக்கி ஊற்றிப் பிசைந்து பகல் உணவில் மட்டும் சாப்பிட்டுவர குன்ம நோய், அசீரணம், வயிற்றில் ரணம், வாயுத்தொல்லை, மற்றும் சிறுகுடல், இரைப்பை, பெருங்குடல் ஆகியவைகளில் காணும் எல்லாவித புண், ரணம், அழிற்சி யாவும் ஆறிப்போகும். அறுவை சிகிச்சை செய்து தான் தீரவேண்டும் என்ற நோய்களும் மேல் கண்ட முறையால் அறுவை சிகிச்சையின்றி குணமாக்கிக் கொள்ளலாம். பத்தியம்; சுட்ட புளி, வறுத்த உப்பு சேர்த்துக் கொண்டு இதர பொருட்களை நீக்கி இச்சா பத்தியமாக இருப்பது அவசியம்.

இரணக் கள்ளி செடியின் சமூலத்தை எடுத்து இடித்து சாறு 500 மில்லி, தேங்காய் எண்ணை 400 மில்லி, அதனுடன் கஸ்தூரி மஞ்சள் 10 கிராம், நீரடிமுத்து 20 கிராம், கார்போக அரிசி 30 கிராம், கப்பு மஞ்சள் 40 கிராம், கசகசா 5 கிராம், சேர்த்து இடித்து யாவும் ஒன்றாக கலந்து அடுப்பில் சிறு தீயாக கொதிக்க வைத்து சாறு சுண்டிய பின்னர் வடிகட்டி வைத்துக் கொண்டு, காலையில் எழுந்து சர்மநோய் உடையவர் தலை முதல் கால் வரை மேலுக்குப் பூசி அரைமணி நேரம் ஊரவைத்துப் பின்னர் இளஞ்சூடான நீரில் சீயக்காய்த் தூள் போட்டுக் குளித்துவர குட்டம், மேகநீர், ஊரல் படை, கருமேகநீர், சம்பந்தமான சர்ம நோய், செம்மேகப்படை, கிரந்தி நோய்கள் யாவும் போகும்.

சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இரணகள்ளி இலையை அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு நாளுக்கு ஒரு இலை வீதம் (அதை சுத்தம் செய்து) மென்று சாப்பிட்ட பின் 100 மில்லி தண்ணீர் குடித்தால் 4 வது நாள் சிறுநீரககற்கள் வெளியேறிவிடும். இதை அறிய, சாப்பிடும் முன்பும், மூன்றாவது இலை சாப்பிட்ட பின்பும் ஸ்கேன் செய்து பார்த்தால் குணமாவது கண்கூடத் தெறியும். மீண்டும் கல் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை.
….
கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி:

நமது இரத்தத்தில் பலவிதமான கலங்கள், கனிம, கரிமப்பொருட்கள் கலந்துள்ளன. இவை உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை தருவதுடன் கலங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.

டிபன்ஸ் மெக்கானிசம் என்று சொல்லப்படும் கலங்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன. உணவுப்பாதை, மூச்சுப்பாதை, தோல் போன்றவற்றின் வாயிலாக நமது உடலுக்குள் நுழையும் நுண்கிருமிகள் இரத்த அணுக்களுடன் சண்டையிடும்போது அழிந்து விடுகின்றன அல்லது இரத்த அணுக்களால் தூக்கியயறிப்பட்டு தோலின் வாயிலாக வெளியேற்றப் படுகின்றன. இவை வியர்வை துவாரங்களை அடைத்து கட்டிகளை உண்டு பண்ணுகின்றன. அதுமட்டுமின்றி தோலின் வாயிலாக உடலுக்குள் செல்லும் நுண்கிருமிகளும் இரத்தத்தை சென்றடைய முடியாமல் தோலிலேயே தங்கி ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டு தோலில் கட்டிகளாக மாறுகின்றன.

இந்தக் கட்டிகள் நாட்கள் செல்லச் செல்ல பெரிதாகி, சிவந்து, உடைந்து சீழாக வெளியேறி பின் புண்களாக மாறி ஆறுகின்றன. இதனால் இயற்கையாகவே கிருமிகள் கிருமிகளாலே அழிக்கப்பட்டு உடல் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு தோன்றும் கட்டிகள் சிலந்தி கட்டிகள், உஷ்ண கட்டிகள், பிளவை கட்டிகள் என பல வழக்கப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

மேலும் நாம் தோலை சுத்தமாக வைக்காததால் தோலுக்கடியில் பலவிதமான மலினங்களும் சேருவதால் தோல் தடித்து அதிலுள்ள செல்கள் சேதமடைகின்றன. இவ்வாறு சேதமடைந்த செல்களிலுள்ள நுண்கிருமிகள் வெளியேற முடியாமல் தோல் மற்றும் தோலின் கீழ்ப்பகுதியில் பலவிதமான கட்டிகளை உண்டாக்குகின்றன. இவ்வாறு உண்டாகும் கட்டிகள் பெரும்பாலும் தொடை, முதுகு, இடுப்பு, கால், கைகள் மற்றும் புட்டப் பகுதிகளில் உண்டாகுகின்றன.

சர்க்கரை நோயாளிகள், சுகாதாரமற்ற இடத்தில் வசிப்பவர்கள், உணவு கட்டுப்பாடில்லாதவர்கள், உடல் உழைப்பில்லாதவர்கள், அடிக்கடி தொற்றுநோய்க்கு ஆளாகுபவர்கள் மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு அடிக்கடி கட்டிகள் உண்டாகின்றன. லேசான வீக்கமாக ஆரம்பித்து அதில் தடிப்பு, வலி, எரிச்சல் ஆகியன தோன்றி பின் கட்டியாக மாறும். இது போன்ற தோல் மற்றும் சதை கட்டிகள் வளர்ந்து உடைவதற்கு பல நாட்களாவதுடன் அந்த நாட்கள் வரை வலி, சுரம், நெறிகட்டுதல் போன்ற பல தொல்லைகளையும் ஏற்படுத்துவதால் கட்டிகளை உடனே உடைத்து அவற்றை ஆற்றும் நோய் எதிர்ப்பு தன்மையுள்ள மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கட்டியில் தோன்றும் சீழ் பிற இடங்களில் பரவுவதற்கு வாய்ப்புண்டு.

இவ்வாறு தோலில் தோன்றும் கட்டிகள் நாளுக்குநாள் பெரிதாகி கடும் வேதனையை உண்டாக்குவதுடன் குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும், சீழ் கோர்த்து உடைகின்றன. கட்டிகள் முற்ற ஆரம்பித்ததும் அவற்றை மருத்துவரின் மேற்பார்வையில் கீறி, புண்களை ஆற்ற வேண்டும். இல்லாவிட்டால் உறுப்புகள் அழுகிப் போக ஆரம்பித்துவிடும். சாதாரண கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே பழுக்கச் செய்து உடைத்து விடவேண்டும்.

கட்டியை எளிதாக பழுக்கச் செய்து உடைக்கும் அற்புத ஆற்றலுடையது மட்டுமின்றி வறண்ட பகுதிகளில் கூட செழித்து, வளர்ந்து காணப்படும் எளிய மூலிகைதான் சப்பாத்திக்கள்ளி.

ஒபன்சியா டிலேனி என்ற தாவரவியல் பெயர் கொண்ட கேக்டேசியே குடும்பத்தைச் சார்ந்த சப்பாத்திக்கள்ளியின் தண்டுகளே இலைகளாக மாற்றுரு கொண்டுள்ளன. இதன் இலைகளில் ஏராளமான அளவு நீர்ச்சத்தும், ஆர்பினோகேலக்டன், குர்சிட்டின் மற்றும் பிளேவனால்கள் போன்ற வேதிச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவை கிருமிகளை அழித்து இரத்தக் கட்டிகளை கரைக்கும் தன்மையுடையவை.

முட்களுள்ள சப்பாத்திக்கள்ளியின் இலைத்தண்டை பிளந்து, வெளிப்புறமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி, கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகள் விரைவில் உடைந்து புண் எளிதில் ஆறும். புண் ஆற தாமதமானால் மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குணமுண்டாகும்.

சகல தோல் நோய்க்கும் சதுரக்கள்ளி:

நமது தோல் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாப்பது மட்டுமின்றி, உடலின் வெப்பநிலையை சமப்படுத்தவும், வியர்வையை வெளியேற்றவும் பயன்படுகிறது. ஆனால் இதேபோல் பல நுண்கிருமிகளும் உயிர்வாழ இடமளிக்கிறது என்பதும் அதிர்ச்சியான செய்தியாகும்.

தோலில் எவ்வளவு நுண்கிருமிகள் இருந்தாலும் அது இரத்தத்தில் கலந்துவிட வாய்ப்புண்டு. தோலில் தோன்றும் நுண்கிருமிகளால் உடலில் பல உபாதைகள் உண்டாகிவிடுகின்றன. தோலில் அரிப்பு, வெடிப்பு, தோல் சிவத்தல், செதில் செதிலாக உதிர்தல், நிறமாற்றம், தோலில் உணர்ச்சியின்மை போன்ற பல உபாதைகளுக்கு தோலில் வளரும் கிருமிகளே காரணமாக அமைகிறது.

இந்த கிருமிகள் தோலின் அடுக்குகளை கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி, தோலின் எண்ணெய் கோளங்களை அடைத்து, வியர்வை துவாரங்களை சிதைத்து, தோலுக்கு நிறத்தை தரும் மெலனின் மற்றும் ரோமத்திற்கு நிறத்தை தரும் கெரட்டின் நிறமிகளை அழித்து கொஞ்சம் கொஞ்சமாக நுண்ணிய இரத்தக்குழாய் மூலமாக இரத்த சுற்றோட்டத்தில் கலக்கின்றன. இந்தக் கிருமிகள் மூச்சுப்பாதை, உணவுப்பாதை என பலவிடங்களில் பல தொல்லைகளை உண்டுபண்ணுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுகுடல், பெருங்குடல் மற்றும் மலக்குடல் பகுதிகளில் பலவிதமான புழுக்களும் வளரத் தொடங்குகின்றன.

தோலில் தோன்றும் நுண்கிருமிகளால் தோல் கடும் பாதிப்படைகிறது. தோல் வறட்சி, சொரி, சிரங்கு, படை, வெண்படை, கரப்பான், விரலிடுக்கில் தோன்றும் குருக்கள், முகப்பரு, உடம்பில் ஆங்காங்கே அவ்வப்போது தோன்றும் தடிப்பு, வெண்குட்டம், தலையில் தோன்றும் பொடுகு, பூச்சிவெட்டு, நகத்தில் தோன்றும் நகச்சுற்று, நகச்சொத்தை, தொடையிடுக்கு, அக்குள், கழுத்துப்பகுதிகளில் கடும் அரிப்பு போன்ற பல தொல்லைகள் உண்டாகின்றன. நோயின் தீவிர நிலையில் கடும் காரத்தன்மையுள்ள மருந்துகளை உபயோகித்தால்தான் நோய் கட்டுப்படும்.

காரத்தன்மை அதிகம் மிகுந்த, மூலிகை மருந்துச்சத்துக்கள் அதிகம் நிறைந்த அற்புத மூலிகைதான் சதுரக்கள்ளி. கேட்பாரின்றி சாலையோரங்களில் அதிகமாக முளைத்துக் காணப்படும் கள்ளி வகையைச் சார்ந்த இந்தச் செடிகள் சித்த மருத்துவத்தில் ஏராளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

யுபோர்பியா ஆன்டிக்குவாரம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போர்பியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த செடிகளின் பால் மற்றும் இலைச்சாறு மருத்துவத்திற்கு பயன்படுகிறது. இதன் இலைச்சாற்றில் ப்ரைடலான், 3 ஆல்பா ஆல், 3 பீட்டா ஆல், டேராக்சரால், டேராக்சிரோன், பீட்டா அமீரின், யுபால்யுபோர்பால் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சிரங்குகளை ஆற்றவும், பால்வினை நோய்களில் தோன்றும் புண்களை குணப்படுத்தவும் உதவுகின்றன.

சதுரக்கள்ளியை இடித்து, சாறெடுத்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி பதத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனை தோலில் சொறி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வரலாம்.

மிளகை சதுரக்கள்ளி சாற்றில் ஊறவைத்து, வெயிலில் நன்கு உலர்த்தி, நல்லெண்ணெயில் மூழ்கும்படி பத்து நாட்கள் வைத்திருந்து அந்த எண்ணெயை தலையில் தேய்த்துவர பொடுகு, தலை அரிப்பு நீங்கும்.

சித்த மருந்துக்கடைகளில் கிடைக்கும் மகாமாரீச்சாதி தைலத்தில் சதுரக்கள்ளி இலைச்சாறு சேர்க்கப்படுகிறது. இதனை கிருமித்தொற்று உள்ள இடங்களில் தடவி வரலாம்.

Leave a Reply