கர்ப்ப காலத்திற்கான சித்த மருத்துவம்

#Trendy_Doctor
கர்ப்ப காலத்திற்கான சித்த மருத்துவம்:-
தினமும் நெல்லிக்காயை இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
கர்ப்பிணி பெண்கள் அன்னாச்சிப் பழம் சாப்பிட கூடாது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கருவுற்ற பெண்கள் இளநீரில் பனங்கற்கண்டு சேர்த்து பருகி வந்தால் சீறுநீர் ந‌ன்றாக‌ பிரியும்.
தேங்காய் குரும்பலை அரைத்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை வலுப் பெறும்.
அரச மரத்தின் இலை, பட்டை, வேர் மற்றும் விதை ஆகியவற்றை இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு கஷாயம் செய்து குடித்து வந்தால் கருப்பைக் கோளாறுகள் நீங்கி நலம் பெறலாம். 
மாதுளை வேர்பட்டை, மாதுளை விதை ஆகியவற்றை காயவைத்து பொடி செய்து மூன்று கிராம் சுடுதண்ணீரில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறுகள் நீங்கும்.
அருகம்புல் சாறு காலை உணவுக்கு முன் குடிக்கவும்.செவ்வாழை பழம் மதிய உணவுக்கு பின் சாப்பிடவும். மாதுளம்பழச் சாறு இரவு உணவுக்கு பின் குடித்து வர கருப்பை வலுப்பெறும்.
வறுத்த காப்பிக் கொட்டையை ஒன்றிரண்டு எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் எச்சில் ஊறுவதைத் தடுக்கலாம்.
ஒரு முழு வெள்ளைப் பூண்டை எடுத்து நன்றாக தட்டி, ஒரு மஞ்சள் துண்டை எடுத்து அதையும் நன்றாக தட்டி அத்துடன் ஒரு கை கொத்தமல்லியையும் சேர்த்து சட்டியில் போட்டு ஒரு படி தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி கால்வாசியாக வற்ற வைத்து அடிக்கடி சிறுது சிறுது குடித்து வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை புரட்டல், ஆராட்டம், தாகம் ஆகியவை குறையும்.
முருங்கை இலையை தண்ணீர் சேர்த்து காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் கை, கால் வீக்கம் குறையும்.
லவங்கத்தை இடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வற்றிய பிறகு வடிகட்டி வைத்து கொண்டு குடிக்க கொடுத்தால் கர்ப்பிணி பெண்களுக்கு வரும் வாந்தி குறையும்.
முருங்கை இலை 10 கிராம், கொத்தமல்லி 10 கிராம் ஆகியவற்றை நீர் விட்டு நன்கு வேகவைத்து அந்த நீரை பருகி வந்தால் கர்ப்ப கால சமயங்களில் ஏற்படும் வலி குறையும்.
இரண்டு டீஸ்பூன் சீரகத்தூளை 3 டீஸ்பூன் நெய்யில் குழைத்து வெற்றிலையின் பின்புறத்தின் மீது பூசி சட்டியை அடு்ப்பில் வைத்து சூடாக்கி வெற்றிலையின் மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி ஒவ்வொன்றாக வதக்கி 200 மி.லி தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து வயிற்றுவலி ஏற்படும் நேரத்தில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு வந்தால் கர்ப்பம் தரித்த பெண்களின் வயிற்றுவலி குறையும்.
நெல்லுப்பொரியை கஞ்சி காய்ச்சி பருகி வந்தால் வாந்தி நிற்கும். நன்றாக பசி எடுக்கும். அதை தொடர்ச்சியாக குடித்து வாந்தால் அனைத்தும் சரியாகி விடும்.
20 கிராம் சீரகத்தைப் போட்டு கஷாயம் காய்ச்சி அத்துடன் 20 கிராம் பசு வெண்ணெயைக் கலந்து கொடுத்தால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி குறையும்.
இரண்டு அத்திப்பழங்கள், இரண்டு பேரீச்சை, சிறிதளவு உலர் திராட்சை இவற்றை காலையில் சாப்பிட்டுவந்தால் எடை குறைவு,இரத்தம் குறைதல் போன்ற பிரச்சனைகளை போக்கலாம்.
Trendy Doctor 

Leave a Reply