ஓமம்

பல்வலியைப் போக்கும்  ஓமம் !
வீட்டில் எப்போதும் இருக்க வேண்டிய பொருட்களில் ஓமத்துக்கு மிக முக்கிய இடம் உண்டு.
வயிறு வலி, அஜீரணக் கோளாறுகள், இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் போன்ற பிரச்னைகளைச் சரி செய்யும் ஆற்றல், ஓமத்துக்கு உண்டு.
ஓமத்தை வறுத்து, தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடித்தால், வயிற்று வலி  நீங்கும்.
பல்வலியைப் போக்கும் ஆற்றல் ஓமத்துக்கு உண்டு. சளி, இருமல் போன்ற பிரச்னைகளையும் சரிசெய்யும்.
வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும். மலச்சிக்கல் பிரச்னையைச் சரிசெய்யும்.
ஓமத்தில் இருந்துதான், தைமால் (Thymol) என்ற எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது, பூஞ்சைத் தொற்று, பாக்டீரியா தொற்று போன்ற நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும்.

Leave a Reply