எளிய பாட்டி வைத்தியம் 


* மிளகை எடுத்து இடித்து போடி செய்து தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
* வேப்பம் பூவை லேசாக தணல் காண்பித்து தாங்கக்கூடிய சூட்டில் வேப்பம் பூவை உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் முடி வளரும்.
* தலைவலி ஏற்படும் நேரத்தில் சிறிது மருதாணி இலைகளை அரைத்து நெற்றிப் பொட்டில் தடவி வந்தால் தலைவலி குறையும்.
* எலுமிச்சை இலைகளை  எடுத்து வெண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்து வலி இருக்கும் இடத்தில தடவி வந்தால் சுளுக்கு வலி குறையும்.
* சர்க்கரை 10 கிராம். தேன் 2 மேசைக் கரண்டி கலந்து காலை, பகல், மாலை என மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.
* முள்ளங்கியை துருவி மேலாக சிறிது தேன் கலந்து, சாப்பிட்டால் உடல் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.
* நன்கு பழுத்த கொய்யாப் பழத்துடன் மிளகு, எலுமிச்சைப்பழச்சாறு ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
* பப்பாளி இலையை அரைத்து சிறிய உருண்டை அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.
* வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.
* பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
* வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

Leave a Reply