எளிய இயற்கை மருத்துவம்

எளிய இயற்கை மருத்துவம் :-
1) பல்வலி மருந்து – பூச்சிப் பல் இருப்பவர்கள் கிராம்பை அவ்விடத்தில் தூளாக்கி வைத்தால் வலி நீங்கும்
2) பேதி குணமாக வழி –  அவரை இலை சாறை தயிருடன் சாப்பிட்டால் பேதி குறையும்
3) குமட்டல் வயிற்றுப் போக்கு நீங்க –  எலுமிச்சைப் பழச் சாறில் சீரகம் ஊற வைத்து காயவைத்து சுவைத்து மென்று சாப்பிட வேண்டும்.
4) இரத்த வாந்தி நீங்க –  ஆடுதொடா இலை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சரியாகும்.
5) மூல நோய் குணமாக –  பப்பாளி பழம், மாம்பழம் இரண்டையும் தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் குணமாகும்.
6) கால் வெடிப்பு நீங்க –  கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சாறு பிழிந்து தடவினால் வெடிப்பு நீங்கும்.
7) பல் உறுதியாக – மாவிலையைப் பொடி செய்து பற்களை துலக்கி வர பல் உறுதி பெறும்.
8) தோல் வியாதி நீங்க  – கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி அரைத்து எந்த இடத்தில் தோல் வியாதி இருக்கிறதோ அந்த இடத்தில் தடவ வேண்டும்.
9) சுளுக்கு நீங்க வழி – உப்பு, புளியை கரைத்து கொதிக்க வைத்து பின் இறக்கி ஆறியவுடன் பற்றுப் போட வீக்கம், ரத்தக் கட்டு குணமாகும்.
10) இரத்தத்தை சுத்தப்படுத்த –  கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி சாப்பிட வேண்டும். கண்பார்வையும் கூர்மையாகும்.

Leave a Reply