அஷ்ட சூரணம் வேறு முறை

பெருங்காயம் – 10 கிராம்
வசம்பு – 20 கிராம்
திப்பிலி – 30 கிராம்
சுக்கு – 40 கிராம்
ஓமம் – 50 கிராம்
கடுக்காய் – 60 கிராம்
சித்ரமூலம் – 70 கிராம்
கோஷ்டம் – 80 கிராம்

அனைத்தையும் சுத்தி செய்துக் கொள்ள வேண்டும்.

பெருங்காயத்தை நெய்யில் பொரித்து தூள் செய்துக் கொள்ளவேண்டும்.

வசம்பை கருக வறுத்து தூள் செய்துக் கொள்ளவேண்டும்.

திப்பிலியை எலுமிச்சை சாற்றில் ஊறவைத்து காய்ந்ததும் மிதமாக வறுத்து தூள் செய்துக் கொள்ளவேண்டும்.

சுக்கை தோல் நீக்கி சுண்ணாம்பு தடவி காயவைத்து சுண்ணாம்பை சுரண்டி தூள் செய்துக் கொள்ளவேண்டும்.

ஓமத்தை சுண்ணாம்பு தெளிநீரில் ஊறவைத்து நன்றாக காயவைத்து தூள் செய்துக் கொள்ளவேண்டும்.

கடுக்காயை கழுநீரில் ஊறவைத்து கொட்டையை நீக்கி காயவைத்து தூள் செய்துக் கொள்ளவேண்டும்.

சித்ரமூலத்தை பாலில் புட்டவியல் செய்து தூள் செய்துக் கொள்ளவேண்டும்.

கோஷ்டத்தை காயவைத்து இடித்து தூள் செய்துக் கொள்ளவேண்டும்.

மேலே கூறி இருப்பது பொது சுத்தி முறை. மேலும் பல முறைகளில் சுத்தி செய்யலாம். அது அவரவரின் அனுபவத்தை பொருத்தது.

தனித்தனியாக இடித்து சலித்து தூள் செய்துக் மேற்சொன்ன அளவு படி கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.

அளவு : 1/2 தேக்கரண்டி

அனுபானம் : தண்ணீர் , வெந்நீர், மோர்.

வேளை : காலை , இரவு

தீரும் நோய்கள் : வயிற்று கோளாறுகள், வயிறு உப்பாசம், நீர் கோளாறுகள், செரிமானத்தை உண்டாக்கி பசியை தூண்டும்.

Leave a Reply