117 வயது மூதாட்டியின் ஆரோக்கிய ரகசியம்

60 வயதை கடப்பதே கடினமாக இருக்கும் போது செஞ்சூரி கடந்து ஆரோக்கியமாக வாழ்ந்து வரும் 117 வயது மூதாட்டி கூறும் ஆரோக்கிய இரகசியங்கள்.
நூறு வயது என்பது 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களின் சராசரி வயது. அதற்கு முன்னர் நமது பண்டைய காலத்து மக்கள் 130 – 150 வரை சாதாரணமாக வாழ்ந்துள்ளனர்.

மூன்று – நான்கு தலைமுறை கண்டு வாழ்ந்தவர்களும் இருந்தனர்.  ஆனால், நாம் வேலைகளை சுருக்கிக் கொண்டு இயந்திரமாக வாழ துவங்கிய பிறகு தான் நமது ஆயுளின் காலாவதி நாட்களும் குறைய துவங்கின. இன்று 40 வயது வரை ஆரோக்கியமாக வாழ்வதே கடினமாகிவிட்டது.

இதோ நம்மை வியக்க வைக்கும் 117 வயது மூதாட்டி கூறும் ஆரோக்கிய இரகசியங்கள்.

.முட்டைகள்! கடந்த 90 வருடமாக எம்மா மொராண்டோ தொடர்ந்து தனது உணவு பழக்கத்தில் முட்டையை சேர்த்து உண்டு வருகிறார். ஏறத்தாழ இந்த 90 வருடத்தில் இவர் ஒரு லட்சம் முட்டைகள் உண்டதாக கூறுகிறார். ஒருபோதும் இந்த பழக்கத்தை கடிவிடுவதாக இல்லை எனவும் எம்மா பாட்டி கூறுகிறார்.

20 வயதில்! எம்மா மொராண்டோ-க்கு அவரது 20 வயதில் இரத்த சோகை ஏற்பட்டது. இதற்காக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்ட போது அவர் தினந்தோறும் மூன்று முட்டை சாப்பிட்டு வர கூறியிருக்கிறார். இதை அப்போதிருந்து இன்று வரை கடைப்பிடித்து வருகிறார்.

கொலஸ்ட்ரால்!?? பலரும் முட்டையை அதிகம் உணவில் சேர்ப்பதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இதனால், உடல் பருமன் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது என அச்சம் கொள்வார்கள். ஆனால், எம்மா மொராண்டோ இதை எல்லாம் தவிடுபொடியாக்கி தனது ஆரோக்கியமான ஆயுளுக்கு முட்டை தான் காரணம் என்கிறார்.

முட்டை ஒரு சூப்பர் உணவு!

வைட்டமின் ஏ, ஃபோலேட், வைட்டமின் B5, வைட்டமின் பி 12, வைட்டமின் B2, பாஸ்பரஸ், செலினியம், மற்றும் வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, வைட்டமின் B6, கால்சியம், மற்றும் துத்தநாக (Zinc) போன்ற பல சத்துக்கள் கொண்ட சூப்பர் உணவு தான் முட்டை. மேலும் ஒரு முட்டையில் ஆறு கிராம் புரதம், ஐந்து கிராம் ஆரோக்கிய கொழுப்பும் இருக்கிறது.

முட்டையும் கொலஸ்ட்ராலும்

! ஒரு முட்டையில் ஏறத்தாழ 212 எம்.ஜி அளவு கொலஸ்ட்ரால் இருக்கிறது. இது நீங்கள் ஒரு நாளுக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கொலஸ்ட்ரால் அளவில் பாதி அளவு ஆகும். மேலும், முட்டையில் எச்.டி.எல் எனும் நல்ல கொழுப்பு தான். இந்த எச்.டி.எல் இதய கோளாறு / நோய்கள் உண்டாவதை குறைக்க உதவும் கொழுப்பாகும். முட்டையும் ஆன்டி-ஆக்ஸிடெண்ட்டும்! முட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடெண்ட் கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இவர் கண்களின் நலனை ஊக்கப்படுத்துகிறது. இவை கண்புரை உண்டாகாமல் தடுக்கின்றன

Leave a Reply