​ஹெட்செட் பயன்படுத்துவதால் இவ்வளவு பாதிப்பா?

​ஹெட்செட் பயன்படுத்துவதால் இவ்வளவு பாதிப்பா?

நம்மில் பலரும் பாடல்களை கேட்பதற்காக ஹெட்செட்டை பயன்படுத்துகிறோம். எனினும் அதனால் ஏற்படக்கூடும் பாதிப்புகள் குறித்து நாம் பெரிதாக சிந்தித்து பார்ப்பதில்லை. பயணத்தின் போதோ அல்லது தூங்குவதற்கு முன்னரோ ஹெட்செட்டில் பாடல் கேட்பது என்பது பலரும் பின்பிற்றி வரும் பழக்கமாகவே மாறிவிட்டது.

பேருந்துகளில், ரெயில்களில், ஏன் நடந்து செல்லும் போது கூட ஹெட்செட் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. ஹெட்செட் இல்லாமல் பாடல்களை கேட்பது மற்றவர்களுக்கு தொந்தரவாக அமையும் என்பதே ஹெட்செட் பயன்படுத்தும் பலரின் கூற்றாகும்.
மேலும் சிலர் ஹெட்செட் பயன்படுத்தும் போது ஒலியை துல்லியமாக அறிய முடிகிறதாகவும் கூறுகின்றனர். ஒரு வேளை இது உண்மையாகவே இருந்தாலும் ஹெட்செட்டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி அவர்கள் பெரிதாக எடுத்துகொள்வதில்லை.
தொடர்ந்து ஹெட்செட்டை பயன்படுத்திவந்தால் நமது காதில் ஜவ்வுகள் பாதிக்கக்கூடும். இதன் காரணமாக காதுகள் செவிடுகூட ஆகக்கூடும். பொதுவாக 80-85 வரையிலான டெசிபலுக்கு மேற்பட்ட ஒலிகளை கேட்கும்போது நமது காதுகள் பலமாக பாதிக்கப்படுகின்றன.
எனவே ஹெட்செட்களை குறைந்த ஒலி அளவுடன் பயன்படுத்துவது சிறந்தது. மேலும் விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக தரமில்லாதவைகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம். மேலும் ஹெட்செட்டை தொடர்ந்து பல மணி நேரம் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். வேண்டுமென்றால் சிறிது நேரம் காதுகளுக்கு ஓய்வு அளித்துவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம்.
அடுத்தது ஹெட்செட்களை சுத்தமாக வைத்துகொள்வது. நம்மில் பலரும் இதை செய்ய தவறி விடுகிறோம். அதன் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறோம்.
அதேபோல் அடுத்தவர்களின் ஹெட்செட்களை நாமும் பயன்படுத்த கூடாது, நமக்கு சொந்தமானவற்றை மற்றவர்களுக்கு தரவும் கூடாது. இதன் மூலம் காதில் ஒருவருக்கு உள்ள நோய் மற்றவருக்கும் தொற்றிக்கொள்ளும்.
ஹெட்செட்களில் இருந்து உற்பத்தியாகும் மின்காந்த அலைகள் தமது மூளையை நேரடியாக பாதிக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது மட்டுமில்லாமல் ஹெட்செட்களை பயன்படுத்திகொண்டே சாலையில் செல்பவர்களால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே வாகனம் ஓட்டும் போதோ சாலையில் நடந்துசெல்லும் போதோ ஹெட்செட்டை பயன்படுத்துவதை முற்றிலும் கைவிடவேண்டும்.
முடிந்தளவு ஹெட்செட்டில் பாட்டு கேட்பதை தவிர்த்துவிட்டு இயற்கையின் ஓசையை கேட்க பழகிக்கொள்ளுங்கள். இதன் மூலம் செவிகளுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கு இனிமை ஏற்படக்கூடும்.

Leave a Reply