​மருத மரம்

​மருத மரம்:-


இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது நிகரில்லாத மருந்து. வட இந்தியாவில் மருதம் பட்டைச் சூரணம் மிகவும் பிரபலம். பல நூற்றாண்டுகளாக இதயத்தின் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படியாமல் தடுப்பதற்கு மருத மரப் பட்டையில் உள்ள ‘அர்ஜுனின்’(Arjunin) என்கிற வேதிப் பொருள் பயன்படுவதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்திருக்கின்றனர். இதில், ‘லிப்பிட் பெர்ஆக்சிடேஷன்’ (Lipid peroxidation)  நிறைந்து உள்ளதால் ரத்தம் உறைதலைத் தடுப்பதோடு, இதயத் தசைகளை வலுவாக்கும் ஆற்றலும் மருத மரப் பட்டைக்கு உண்டு. ஆங்கில மருத்துவப்படி மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தாலும் இதைத் துணை மருந்தாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது..
மருதம் பட்டைக் கஷாயம் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்பாட்டில் வைக்கும். சர்க்கரை நோய் – ரத்தக் கொதிப்பு இவை இரண்டும் ஒருசேர ஒருவரைப் பாதித்து இருந்தால், அவருக்குப் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், மருதம் பட்டைக் கஷாயத்தைத் தொடர்ந்து குடித்துவந்தால், பக்கவாதம் வராமல் தடுக்க முடியும். சிறுநீரகப் பிரச்னைகள் விலகவும் சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகரிக்கவும் இந்தக் கஷாயத்தைத் தினமும் 120 மி.லி. அளவு தொடர்ந்து 45 நாட்களுக்குக் குடித்துவர வேண்டும்.
மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ள‍வும்.
tq:dv
Scientific classification:-

————————-

Kingdom: Plantae

(unranked): Angiosperms

(unranked): Eudicots

(unranked): Rosids

Order: Myrtales

Family: Combretaceae

Genus: Terminalia

Species: T. arjuna
Binomial name:-

——————-

Terminalia arjuna

(Roxb.) Wight & Arn.

Leave a Reply