​நுரையீரல் தொற்று

​நுரையீரல் தொற்று:-
நுரையீரல் தொற்றுகளில் இருந்து நாம் விடுபடுவதற்கு விட்டமின்கள், மினரல், புரோட்டின் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு நமது உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டம் அளிக்க வேண்டும்.

மேலும் நாம் சாப்பிடும் உணவுகளில் விட்டமின், மினரல், அமினோ அமிலங்கள், ஃபைடோ சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

                                                                             
இஞ்சி, பூண்டு மற்றும் முள்ளங்கி:
குளிர் காலங்களில் இஞ்சி, பூண்டு மற்றும் முள்ளங்கி போன்ற காய்கறிகள் அதிகமாக விளைகிறது.

எனவே இந்த உணவுப் பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், குளிர்காலத்தில் ஏற்படும் நுரையீரல் தொற்றுகள் தடுக்கப்படுகிறது.
கேரட் மற்றும் கொத்துமல்லி:
கேரட் மற்றும் கொத்துமல்லியை சம அளவு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் சிறிதளவு இஞ்சித் துண்டை சேர்த்து அரைத்து ஜூஸ் போல செய்து தினமும் குடிக்க வேண்டும்.

இதனால் நமது உடலின் சக்தியை அதிகரித்து, உடல் அசதியையும் போக்குகிறது.
மாதுளை:
குளிர்காலத்தில் அதிகமாக கிடைக்கக் கூடிய பழங்களில் ஒன்றான அதிக சத்துக்கள் நிறைந்த மாதுளைப் பழத்தினை தொடர்ந்து சாப்பிடுவதால், நுரையீரல் தொற்றுகளைத் தடுத்து, பலவகையான மருத்துவ ஆரோக்கிய நன்மைகளும் நமக்கு கிடைக்கிறது.
பட்டாணி:
பட்டாணியில் புரதம், விட்டமின் A, C, K, இரும்புச்சத்து, கால்சியம், காப்பர், பொட்டாசியம் போன்ற நம் உடல் ஆரோக்கியத்திற்கான சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

இந்த பட்டாணியில் உள்ள சத்துக்கள் குளிர்காலத்தில் ஏற்படும் நுரையீரல் அலர்ஜியை தடுக்கிறது.
பசலைக் கீரை:
பசலைக் கீரையில் பலவித அற்புதமான சத்துக்கள் இருக்கிறது. மேலும் இந்த கீரை 30 வகையான ஃப்ளேவினாய்டுகளைக் கொண்டுள்ளது.

எனவே இந்த கீரையை நம் உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் புற்று நோய், ஜலதொஷம், காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.
கொய்யா பழம்:
கிவி பழத்தில் உள்ள அனைத்து சத்துக்களையும் கொய்யா பழம் கொண்டுள்ளது.

இந்த கொய்யா பழத்தை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் மழைக்காலங்களில் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய்களை தடுக்கிறது.

Leave a Reply