விவசாய நிலங்கள் வாங்க 5 ஏக்கர் வரை கடன் வழங்கப்படும்

விவசாய நிலங்கள் வாங்க 5 ஏக்கர் வரை கடன் வழங்கப்படும்: வங்கி அதிகாரி தகவல்

#PasumaivikatanAgriExpo2016 #AgriExpoErode
பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ நான்காம் நாளான இன்று தமிழ்நாடு மெர்க்கண்ட்டைல் வங்கியின் துணை பொது மேலாளர் செல்வராஜ் பேசும்போது,
“நிலம் வாங்குவதற்கு 5 ஏக்கர் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு வாங்கப்போகும் இடத்தின் ஆவணங்களை சமர்பித்தால் போதுமானது. வாங்க உள்ள நிலத்தின் வழிகாட்டி மதிப்பில் 75 சதவிகிதம் கடனாகத் தருகிறோம். இதேபோன்று பயிர்க்கடன் ஒரு பயனாளிக்கு 3 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதற்கு 7 சதவிகித வட்டியில் பயிர்க் கடன் வழங்குகிறோம். அதாவது 100 ரூபாய்க்கு 58 பைசா(7 சதவிகிதம்) என்ற அளவில் மிக குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறோம். கடனை 12 மாதங்களுக்குள் திருப்பி செலுத்தும் பட்சத்தில் 3 சதவிகிதம் ஊக்கத் தொகை வழங்கப்படும். 
மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன்  வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, மாட்டுப் பண்ணை போன்ற அனைத்துவிதமான கால்நடை வளர்ப்புக்கும் குறைந்த வட்டியில், எளிதான முறையில் கடன்கள் வழங்கப்படுகிறது. இதற்கு

தேவையான ஆவணங்கள்:
சிட்டா/பட்டா, அடங்கல், உறுதி பத்திரம், நில வரி ரசீது, வருமான சான்றிதழ் இந்த ஆவணங்களை சமர்பித்தாலே போதுமானது. 
இதைதவிர, சோலார் பம்ப் செட்டுக்கு மானியத்தோடு, கடன்கள். உணவு பதப்படுத்துதலுக்கான அமைப்பை உருவாக்குவதற்கு கடன்கள், பண்ணைக் கருவிகள், அறுவடை இயந்திரங்கள், கிரீன் ஹவுஸ், பாலி ஹவுஸ் அமைப்பதற்கான கடன்களும் வழங்கப்படுகின்றன. 
மேலும் விபரங்களுக்கு,

அருகிலுள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி கிளை மேலாளரை அணுகவும்.”

Leave a Reply