வாழ்வு சிறக்க சிறந்த வழி

கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் பிரிக்கப்பட்டபோது, இரண்டுக்கும் இடையில் ஒரு பெரிய சுவர் (பெர்லின் சுவர்) எழுப்பப்பட்டது.
ஒருநாள் கிழக்கு பெர்லினில் இருந்தவர்கள் நிறைய குப்பைகளை கொண்டுவந்து மேற்கு ஜெர்மனி எல்லைக்குள் கொட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
ஆனால் மேற்கு ஜெர்மனிகாரர்கள்பதிலுக்கு என்ன செய்தார்கள் தெரியுமா?
ஒரு லாரி நிறைய ரொட்டிகள் பழங்கள் , மளிகை பொருட்களை எடுத்து வந்து அழகாக எல்லையில் அடுக்கி வைத்துவிட்டு சென்றனர்.
அதன் மேல், “தன்னிடம் உள்ளதையே ஒருவன் கொடுப்பான்” என்ற வாசகம் அடங்கிய அட்டையை வைத்துவிட்டும் சென்றுவிட்டனர்…
உண்மைதானே …
உங்களிடம் உள்ளதைத்தானே பிறருக்கு தருவீர்கள்..
இங்கு ஒவ்வொருவரும் பகிரும் கருத்தும் அவ்வண்ணமே.
எதைக்கற்றார்களோ…
எது வசீகரிக்கிறதோ…
எதன் மீது பற்றுக்கொண்டார்களோ…
அதை தான் கொடுக்கிறார்கள்.
சில பதிவுகளை படித்தவுடனே ஒவ்வொருவரின் நோக்கம் புரிந்து விடும்,
நமது எண்ணம் சிறக்க, நமது வாழ்வு சிறக்கும்…
வாழ்வு சிறந்தால் நம்மை ச்சுற்றி அனைத்தும் சிறக்கும்.

thanks: Needs Raja

Leave a Reply