வாட்ஸ்அப் மற்றும் முகநூல் அன்பர்களே!!!கோபப்படாமல் இதை படிக்கவும்

வாட்ஸ்அப் மற்றும் முகநூல் அன்பர்களே !!!
கோபப்படாமல் இதை படிக்கவும்…
1. தங்களுக்கு forward செய்யப்படும் செய்தியின் உண்மை தன்மையை உறுதி செய்தது உண்டா?
2. இந்த message-ஐ மூன்று குழுக்களுக்கு அனுப்பினால், உங்கள் பேட்டரி recharge ஆகும் என்று கூறினால், கொஞ்சம் கூட யோசிக்காமல் மூன்று குழுக்களுக்கு அனுப்புவீர்களா?
3. ஒரு பெண்ணின் புகைப்படத்தை பதிவு செய்து, இவருக்கு கண் ஆபரேஷன் செய்ய 10 லட்சம் வேண்டும். இதை அனைத்து குழுக்களுக்கு அனுப்பினால் 10 பைசா கிடைக்கும் என செய்தி வந்தால், கொஞ்சம் கூட யோசிக்காமல் அப்படியே அனுப்புவோமா?
4. ஏதாவது free offer என்ற லிங்க் வந்தால், இலவசத்திற்கு ஆசை பட்டு, அதை லிங்க்கை ஏன் கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்வதால் என்ன பிரச்சனை என்று தெரியுமா?
5. தேதி அல்லது உறுதி செய்யாத இரத்தம் வேண்டும் என்று தகவலை, நீங்களும் அப்படியே அனுப்புவது சரியா?
6. இரத்தம் தேவை என்ற தகவல் அனுப்புவதோடு கடமை முடிந்து விட்டதா? என்றாவது ஒரு நாளாவது நான் கொடுக்க வருகிறேன் என்று கூறியதுண்டா?
7. அங்கு ஒரு வெள்ளை காக்கா பறக்கிறது என்பது போன்று தான் பல forward message-கள் வருகின்றன. அதன் உண்மை நிலை ஆராயாமல் ஏன் பகிர வேண்டும்? உண்மை நிலை தெரியவில்லை என்றால் பகிர்வதை தவிர்க்கலாமே.
8. பல forward message-களை படித்து இருப்பீர்கள். அதில் எத்தனை செய்திகளுக்கு செயல் வடிவம் கொடுத்து இருப்பீர்கள். உதாரணம்: மரம் நடுவோம் என்ற வாசகத்தை படிப்பதோடு சரி.
9. இதை விட உச்சம் என்னவென்றால், முகநூலில் இந்த படத்தை லைக் செய்தால் பாம்பு திருப்பி பார்க்கும் என்ற பதிவு இருக்கும். அதற்கு லட்சம் பேர் லைக் செய்து பாம்பு திரும்ப வில்லை என கமெண்ட் செய்கிறார்கள். நாம் என்ன படித்த முட்டாள்களா?
தெருவில் வித்தை காட்டுபவர், எல்லாரும் ஒருமுறை ஜோரா கை தட்டுங்கள் என்றால், என்ன? ஏது? என கேட்காமல் கை தட்டும் கூட்டமா நாம்? 
சிந்திக்காமல் இருப்பதால் தான், அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள் என பலரும் சுலபமாக ஏமாற்றுகின்றனர்.
சிந்திக்கவும். பல கேள்விகளை நீங்களே கேட்டு பார்க்கவும். 
ஒவ்வொருவரும் சிந்திக்க ஆரம்பித்தாலே, பெரிய மாற்றங்கள் உருவாகும். மாற்றத்தை நம்மில் இருந்து உருவாக்குவோம்..
இதை படித்து யாரேனும் மனது காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
இளையதலைமுறை விழிப்புணர்வு அடையவே இந்த பதிவு.
நன்றி,

இளையதலைமுறை

Leave a Reply