மிரண்டது இங்கிலாந்து

ந்தியவை சேர்ந்த இளம் வீரர் பிரணவ் ஒரே இன்னிங்சில் 1009 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் அனைத்து செய்தி தாள்களிலும், விளையாட்டு பக்கங்களை பிரணவ் செய்தி ஆக்கிரமித்துள்ள நிலையில்,  கிரிக்கெட் ஆடி வரும் பிற நாடுகளிலும் அனைத்து பத்திரிகைகளும் பிரணவின் சாதனை குறித்து செய்தி வெளியிட்டு, அவரது திறமையை மெச்சியுள்ளன.

இங்கிலாந்தை சேர்ந்த  மெயில் ஆன்லைன் பதிப்பில்,  ” 1009 நாட் அவுட்…  பிரிட்டன் வீரரின் 116 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டது” என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை அங்கீகரிக்கப்ட்ட போட்டிகளில் பிரிட்டனை சேர்ந்த ஏ.ஈ.ஜே. கோலின்ஸ் அடித்திருந்த 628 ரன்கள்தான் உலக சாதனையாக இருந்தது. கடந்த 1899-ம் ஆண்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

பிரிஸ்டலில் நடந்த பள்ளி அணிகளுக்கிடையேயான ஆட்டத்தின்போது,  ஏ.ஈ.ஜே. கோலின்ஸ்  இந்த சாதனையை  புரிந்தார். தற்போது 116 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீரர் ஒருவரால், அந்த  சாதனை முறியடிக்கப்பட்டுள்ளதாக மெயில் ஆன்லைன் செய்தி வெளியிட்டு பிரணவை கவுரவப்படுத்தியுள்ளது.

‘ டெய்லி டெலிகிராப்’,  “இந்திய சிறுவன் ஒரே இன்னிங்சில் ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்” என்ற செய்திடன்,  பிரணவ் ஆடிய இன்னிங்சின் வீடியோவையும் தனது ஆன்லைன் பதிப்பில் வெளியிட்டுள்ளது.

பி.பி.சி தனது ஆன்லைன் பதிப்பில், ”கிரிக்கெட்டில் புதிய சாதனை பிரணவ் அடித்தார்… 1009 ரன்கள்” என்ற தலைப்பில்,  பிரணவ் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

”பிரணவ் என்ற 15 வயது சிறுவன் ஒரே இன்னிங்சில் ஆயிரம் ரன்கள் அடித்து சாதனை ” என்று ‘தி இன்டிபென்டன்ட்’ தனது செய்தியில் கூறியுள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக இந்திய சிறுவன் ஒருவன் ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளதாக ‘டெய்லி மிரர்’ தனது செய்தியில் கூறியுள்ளது.

”ஒரே இன்னிங்சில் 3 இலக்க ரன்களை இனி மறந்து விடுங்க… இந்திய சிறுவன் 4 இலக்க ரன்களை ஒரே இன்னிங்சில் எட்டியுள்ளான்” என்று ‘சிட்னி மார்னிங் ஹெரால்ட்’ பிரணவுக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

‘ஆயிரம் ரன்கள் ஒரே இன்னிங்ஸ்… இந்திய சிறுவனின் உலக சாதனை ‘ என பாகிஸ்தான் டெய்லி பிரணவுக்கு புகழாரம் சூட்டியுள்ளது. ‘இந்திய இளம் வீரர் ஒரே இன்னிங்சில் ஆயிரம் ரன்கள் அடித்து சாதனை ‘ என ‘தி டான்’ தனது ஆன்லைன் பதிப்பில் கூறியுள்ளது.

Thanks – vikadan

Leave a Reply