மின்கழிவு

பெரிய மின்சாதனங்களில் ஆரம்பித்து செல்போன் போன்ற சிறிய மின்சாதன பொருட்கள் மூலம் உருவாகும் மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக ஐ.நா-வின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் இந்தியா உற்பத்தி செய்த மின் கழிவுகளின் மொத்த அளவு 1.7 மில்லியன் டன் ஆகும். முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் சீனாவும் உள்ளன. இவ்விரு நாடுகளும் சேர்ந்து உலகத்தில் உருவாகும் மொத்த மின்கழிவில் 32 சதவீதத்தை உருவாக்குகின்றன. அதேபோல் ஆசிய நாடுகளான இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சேர்ந்து மொத்தமாக 16 மில்லியன் டன் கழிவுகளை உற்பத்தி செய்கின்றன. இது சராசரியாக ஒரு தனி மனிதருக்கு 3.7 கிலோ கிராம் ஆகும்.

மிகவும் பின்தங்கிய நாடுகள் இருக்கும் கண்டமாக கருதப்படும் ஆப்பிரிக்கா தான் மிக குறைந்த மின்கழிவுகளை உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த ஆப்பிரிக்க நாடுகளும் சேர்ந்து 1.6 மில்லியன் டன் மின்கழிவுகளை உற்பத்தி செய்கின்றன. அடுத்த மூன்றாண்டுகளில் உலகத்தின் மொத்த மின்கழிவு உற்பத்தியானது 21 சதவீதம் அதிகரிக்கும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மக்கி போகாத இந்த மின்கழிவுகளால் சுற்றுசூழலுக்கும் மனிதர்களுக்கும் மோசமன பாதிப்புகள் ஏற்படுகின்றன. முக்கியமாக இனப்பெருக்க, இரத்தம் மற்றும் நரம்பு அமைப்புகளில் சேதத்தை ஏற்படுத்துகிறது. மின்கழிவுகளில் இருந்து வெளிப்படும் மெர்குரி, மூளை மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஒரு கைப்பேசியோ, அல்லது ஒரு மின்கலமோ  அல்லது மின்னணு உதிரிபாகங்களோ உபயோகமற்று போகும் போது அதனை சாதாரணக் குப்பையுடன் போடக்கூடாது. இவைகள் குறிப்பிட்ட ஈரப்பதத்திலோ, வெப்பத்திலோ எளிதில் விடத்தைக் கக்கும் அபாயம் கொண்டவை. பிளாஸ்டிக்காவது கரிம[Organic Elements] வேதிப்பொருட்களைத்தான் கொண்டிருக்கும் ஆனால் அதைவிட அபாயமான  அலோக, தாண்டல் உலோக[Transition Elements] வேதிப்பொருட்கள் எல்லாம் இந்த மின்னணுப் பொருட்களில் உண்டு. குப்பையில் இருந்து சிலரால் எரிக்கப்பட்டு எளிதில் காற்றில் கலந்துவிடுகிறது. இதனால் இருதய நோய்கள், நுரையீரல் பாதிப்பு, டி.என்.ஏ. சிதைவு, புற்று நோய் என பல்நோக்கு நோய்கள் படையெடுக்கும் அபாயம் உள்ளது.

ஒரு சாதாரண கடிகார பேட்டரி  தூருடைந்து, துருப்பிடித்து, துகிலுரிந்த நிலையில் துர்பாக்கியமாக அவை  இருக்கும். ஆனால் அது ஒரு உயிர்க்கொல்லி என்று பலரும் அறிந்ததில்லை.  அந்த மின்கலத்திலுள்ள பொட்டாசியம் ஹைட்ராக்ஸட் எளிதில் நீருடன் சேர்ந்து மின்கலனை அரித்து, உள்ளிருக்கும் பாதரச பயில்வானை மண்ணில் கலந்துவிடுகிறது. பாதரசம் என்பது மூளை நரம்புகளைப் பாதிக்கும் ஒரு வேதிப்பொருளாகும், இது எளிதில் காற்றில் அல்லது நீரில் கலந்து மனிதவுடலுக்குள் சென்று, மனபிறழ்ச்சி, கோமா, தற்கொலையுணர்வு என பலவித உபாதைகளை ஏற்படுத்துகிறது

 

Leave a Reply