மனிதனுக்கு அஞ்சும் காட்டுவாசிகள்

எந்த ஒரு வசதியும் இல்லாமல் அடர்ந்த காட்டுக்குள் நூறு சதவீதம் இயற்கையோடு இயற்கையாக வாழும் நூற்றுக்கனக்கான பழங்குடியினர் இருக்கிறார்கள்.
குகைகளில் வசித்து விலங்குகளை வேட்டையாடும் பழங்குடி மக்கள் பலர் இன்னமும் சமைக்கத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். நெருப்பை பற்றி தெரியும் என்றாலும், அதை வைத்து சமைக்க தெரியாது. அதேபோல் அவர்கள் உலகத்தோடு ஒட்டி உறவாடவும் விரும்புவது இல்லை. அந்தமான் நிகோபர் தீவுகளில் சென்டினல் என்ற தீவில் வசிக்கும் சென்டினலீஸ் பழங்குடி மக்கள் இதுவரைக்கும் தங்கள் அருகில் யாரையும் நெருங்கவிட்டதே இல்லை. நாகரீகத்தையும் நவின உலகத்தையும் கற்றுத்தருகிறோம் என்று வெளியில் இருந்து காட்டுக்குள் செல்பவர்காளாலும் காட்டு மனிதர்ளுக்கு ஆபத்து உண்டு.

காட்டில் ஏற்படும் எவ்வளவோ கொடூரமான வியாதிகளில் பிழைத்துக் கொள்ளும் இவர்களால் நாகரீக மனிதர்களால் ஏற்படும் சாதாரண நோய்களைகூட தாங்கிக் கொள்ள முடிவதில்லை. உதாரணமாக நாகரீக மனிதன் மூலம் பரவிய ஜலதோஷத்தை கூட தாங்கமுடியாமல் காட்டு மனிதர்களின் உயிர் பறிபோய் விடுகிறது. இதனாலே நாகரீக மனிதர்கள் அவர்களுக்கு ஆகாதவர்களாக இருக்கிறார்கள்.

Leave a Reply