பூ பூக்காமல் வரும் பழம்

அத்தி பூத்த மாதிரி என்று சொல்வார்கள். அப்ப அத்திப் பழங்கள் எப்படிக் கிடைத்-திருக்கின்றன என்றெல்லாம் சந்தேகம் எழும்பும். ஒரு மரம் பூக்காமல் காய் ஏது கனி ஏது. அத்தி மரமும் பூக்கத்தான் செய்கிறது. அந்தப் பூக்கள் நம் பார்வைக்குத் தெரிவதில்லை. கேலிக்ஸ் எனப்படும் அதன் பச்சை நிறக் காம்புப் பகுதிக்கு உள்ளேயே பூ பாகம் மறைந்து கொள்வதால் பூக்கள் நம் பார்வைக்குத் தட்டுப்படுவதற்குள் பூவின் சூல் பையில் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு ஒரு அவசரத்துக்கு உட்பட்டு காயாகி பின் கனியாகி இலைகளுக்கு மேல் எட்டிப் பார்க்கிறது.

நமது பார்வைக்குக் கிடைப்பவை இந்தக் கனிகள்தான். அத்தி மரம்தான் இப்படியென்று இல்லை. அரச மரங்களிலும், ஆல மரங்களிலும் கூட நாம் பூக்களைப் பார்க்க முடியாது. நேரடியாய் நமக்குக் கிடைப்பவை பழங்கள்தான்.

periyarpinju

Leave a Reply