புற்றுநோய் உருவாக்கும் காரணிகளில் முதலிடம் வகிப்பது

புகைபிடித்தல் உள்ளிட்ட காரணிகளால் புற்றுநோய் ஏற்படுகிறது என்ற காலம்போய், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பர்கர், சாஸ் உள்ளிட்டவைகளாலும் புற்றுநோய் தற்போது பரவிவருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் குறித்த ஆய்வுத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தற்போது மக்களின் வாழ்க்கைமுறை அவசரகதி கொண்டதாக மாறியுள்ளது. இந்த அவசர உலகில், சமைத்து சாப்பிட்ட காலம்போய், ஒருநாள் சமைத்த உணவை, பல நாட்கள் வைத்து உண்ணும் காலத்தில் நாம் உள்ளோம்.

பதப்படுத்தட்ட இறைச்சி வகைகள், புற்றுநோய் உருவாக்கும் கார்சினோஜென்களின் புகலிடமாக உள்ளது. பதப்படுத்தப்பட்ட மற்ற உணவுகளை ஒப்பிடும்போது, பன்றி இறைச்சி மிகுந்த பாதிப்பை உண்டாக்குவதாக உள்ளது.

பர்கர், பன்றி இறைச்சி உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட இறைச்சி உள்ளிட்டவற்றின் அதீத பயன்பாட்டால் ஏற்படும் நோய்க்கு பிரிட்டனில் ஆண்டு ஒன்றிற்கு 1,50,000 பேர் பலியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் உருவாக்கும் காரணிகளில் முதலிடம் வகிப்பது பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் இறைச்சிகள் தான், அதற்கு அடுத்த இடங்களில் மதுப்பழக்கம், ஆர்சனிக் மற்றும் புகைபிடிப்பது உள்ளிட்டவை உள்ளன

Leave a Reply