பிறந்த குழந்தைகள் குறித்து இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா

இவ்வுலகில் ஒவ்வொரு நொடியிலும் ஏராளமான குழந்தைகள் பிறந்து கொண்டு தான் இருக்கின்றன. தன் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது ஏற்படும் உணர்ச்சிகளை ஒவ்வொரு தாயாலும் சொல்லி மாளாது. இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்? புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பற்றிய சில அரிய உண்மைகளைப் பற்றி ஒரு பெற்றோராக நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். என்று நம் கண்கள் தானாக விரியும்! அப்படிப்பட்ட சில ஆச்சரியமான சில உண்மைகள் குறித்து இப்போது நாம் பார்க்கலாம். இரட்டையர்களைப் பற்றி நீங்கள் அறிந்திராத 5 உண்மைகள்.
1. ‘வெயிட்’டான மே குழந்தைகள்! பிற மாதங்களில் பிறந்த குழந்தைகளை விட, மே மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிக எடையுடன் இருக்குமாம்.
2.தாயின் வாசனை! பிறந்த நொடியிலிருந்தே தன் தாயின் வாசனையைக் குழந்தைகள் அறிந்து வைத்திருக்குமாம்! அதுமட்டுமின்றி பிறந்த சில வாரங்களில், தம் தாயை அவை அடையாளமும் கண்டு கொள்ளுமாம்.
3. நோ முழங்கால் சில்லு! நம் முழங்கால்களில் சாதாரணமாக இருக்கும் கெட்டியான சில்லுகள், பிறந்த குழந்தையிடம் இருக்காதாம்.
4. கருவில் கேட்கும் திறன்! தாயின் கருவில் இருக்கும் குழந்தையால் வெளியே ஒலித்துக் கொண்டிருக்கும் பல விஷயங்களைக் கேட்க முடியுமாம்! நல்ல விஷயங்களை சத்தமாகப் படித்துக் காண்பிப்பது, மெல்லிசை கேட்பது இவையெல்லாமே குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் விஷயங்களாகும்.
5. உப்புச் சப்பில்லாமல்…! பிறந்த குழந்தைக்கு நான்கு மாதங்கள் ஆகும் வரை உப்பின் சுவை தெரியாதாம்! இதற்கு சோடியத்தை உருவாக்கும் சிறுநீரகங்கள் முழு வளர்ச்சியடையாமல் இருப்பது தான் காரணம்.
6. அகச் செவி மட்டுமே! பிறந்த குழந்தையிடம் உள்ள உணர்வுள்ள உறுப்புக்களில், அகச் செவி என்று அழைக்கப்படும் உள்புறக் காது மட்டுமே முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்குமாம்.
7. பு(பொ)ன்னகை! இவ்வுலகில், பிறந்ததும் தன் பெற்றோரைப் பார்த்துப் புன்னகை புரியக் கூடிய ஒரே உயிரினம் என்றால் அது மனிதர்களாகிய நாம் தான்.
8. ஒரே நேரத்தில் மூச்சு விடு, விழுங்கு! பிறந்து ஏழு ஆண்டுகள் ஆகும் வரை, ஒரு குழந்தையால் ஒரே நேரத்தில் மூச்சு விடவும் விழுங்கவும் முடியுமாம்.
9. இயற்கை நீச்சல் வீரர்கள்! பிறந்த குழந்தைகள் இயற்கையிலேயே நீச்சல் வித்தைகளைப் பெற்றிருக்குமாம்! தண்ணீருக்கு அடியில் குழந்தைகளால் மூச்சை அடக்கி ‘தம்’ கட்ட முடியுமாம்! சுமார் பத்து மாதங்கள் கருவில் மிதந்து கொண்டிருந்த அனுபவம் தான் அது! வயதாக ஆக இத்திறமைகள் வேகமாக மறைந்து விடுகின்றன, புதிதாகக் கற்றுக் கொள்ளும் வரை.
10. 316 எலும்புகள்! ஒவ்வொரு பிறந்த குழந்தைக்கும் 300 எலும்புகள் இருக்குமாம்! சாதாரணமாக, வளர்ந்த மனித உடலில் 206 எலும்புகள் மட்டுமே இருக்கும். வயதாக ஆக சில எலும்புகள் இணைந்து 300 ஆக இருந்தது 206 ஆகி விடுகிறது

குழந்தைகளை யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் புதிதாக பிறந்த குழந்தைகளைப் பார்த்தாலே பலருக்கும் அக்குழந்தையைத் தூக்கி கொஞ்ச வேண்டுமென்று தோன்றும். ஆனால் பிறந்த குழந்தையைக் குறித்து பலருக்கும் ஒருசில விஷயங்கள் முழுமையாகவும் தெளிவாகவும் தெரியாது.

ஆம், என்ன தான் பல கஷ்டங்களைத் தாங்கி பத்து மாதம் குழந்தையை சுமந்து பெற்றாலும், அத்தாய்க்கும் பிறந்த குழந்தையைப் பற்றி முழுமையாக தெரிந்திருக்காது. அதிலும் முதல் குழந்தை என்றால் சிறுதுளி கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இங்கு பிறந்த குழந்தையைப் பற்றி பலருக்கும் தெரியாத சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

பிறந்த குழந்தைக்கு கண்ணீர் சுரப்பிகளே இருக்காது. மேலும் இவர்களுக்கு பிறந்து 3 மாதங்களில் தான் கண்ணீர் சுரப்பிகள் வளரவே ஆரம்பிக்கும். வேண்டுமானால் பிறந்த குழந்தையின் அழுகையைக் கவனியுங்கள். அவர்களுக்கு கண்ணீரே வராது!

பிறந்த குழந்தை தாயிடம் வந்ததும் தன் அழுகையை நிறுத்திவிடும். எப்படியெனில் கருவில் இருக்கும் போதே, தன் தாயின் குரல் மற்றும் ஸ்பரிசம் நன்கு தெரியும்.

பிறந்த குழந்தையால் 20 அடி தூரத்தில் இருப்பதை மட்டுமே காண முடியும். சராசரி மனிதனால் 600 அடி வரையுள்ள அனைத்தையும் காண முடியும்.

ஆய்வுகளில் பிறந்த குழந்தையால் மனித முகத்தை நன்கு அடையாளம் காண முடியும் என்று தெரிய வந்துள்ளது. மேலும் பிறந்த குழந்தைகளுக்கு பொம்மைகளை விட, ஒருவரின் முகத்தைக் காண பிடிக்கும். அதனால் தான் பிறந்த குழந்தைகள் ஒருவரைக் காணும் போது புன்னகைக்கின்றன.

மற்றொரு முக்கியமான விஷயம் பிறந்த குழந்தைகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் மட்டும் தான் தெரியும். அவர்கள் வளர வளர பார்வையும் வளர்ச்சி பெற்று, மற்ற நிறங்களால் அவர்கள் கவரப்படுகின்றனர்.

சராசரி மனிதனின் உடலில் 206 எலும்புகள் இருக்கும். ஆனால் பிறந்த குழந்தைக்கோ ஆரம்பத்தில் 270 எலும்புகள் இருக்கும். அவர்கள் வளர வளர மண்டை ஓடு மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் உள்ள எலும்புகள் இணைந்து 206 எலும்புகளாகின்றன.

குழந்தைகள் பிறந்ததும் அவர்களின் தலை மற்றும் சருமத்தில் மென்மையான முடிகள் அதிகம் இருக்கும். ஆனால் ஒரு சில வாரங்களில் அந்த முடி தானாக உதிர்த்துவிடும். இருப்பினும் தலையில் உதிர்ந்த முடிகள் அடுத்த சில வாரங்களில் நன்கு வளர ஆரம்பிக்கும்.

Leave a Reply