பால்கன் பறவைகள்

தென்னிந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் அரிட்டாபட்டி மலையில் மட்டுமே அரிய வகை ‘லகர் ஃபால்கன்’ பறவை கூடு கட்டி வசித்து வருவதாக பறவையியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது அரிட்டாபட்டி மலை. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சமண சிற்பங்கள், படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், குடவரைக் கோயில்கள் இங்கே காணப்படுகின்றன. இது போன்ற புராதனச் சின்னங்களுக்குப் பெயர் பெற்ற மலையில் கல், மண், மரங்கள் மட்டுமின்றி அதையும் கடந்து பல அரிய வகை உயிரினங்களும் வசித்து வருகின்றன. அதில் ஒன்று ‘லகர் ஃபால்கன்’ பறவை.

இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்பட்ட இப்பறவைகள் தற்போது ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் மிக அரிதாக அரிட்டாபட்டி மலையில் இந்தப் பறவைகள் வசித்து வருகின்றன.

வேட்டைப் பறவைகளான கழுகு இனத்தைச் சேர்ந்த இவை மலை உச்சியில் உள்ள பாறைகளின் இடுக்குகளில்தான் கூடு கட்டும். தமிழ்நாட்டின் பிற பகுதிகள் மட்டுமின்றி தென்னிந்தியாவில் வேறு எங்குமே இந்தப் பறவை இனங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய பறவை

 பால்கன் பறவைகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய பறவை. சவுதி அரேபிய இளவரசர், இந்த பால்கன் பறவைகளை ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்துக்குக் கொண்டு செல்லும் பொருட்டு, 80 பயணச்சீட்டுகளை வாங்கி,  அப்பறவைகளை, இருக்கைகளுடன் கட்டிப் பாதுகாப்பான பயணத்துக்கு வழிவகை செய்திருந்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் பால்கன் பறவைகளுக்கு என்று பிரத்யேக பசுமை கடவுச்சீட்டுகள் இருப்பதாகவும், பால்கன் பறவைகளை பாரெய்ன் குவைத், ஓமன், கட்டார் சவுதி அரேபியா, பாகிஸ்தான், மொனாக்கோ மற்றும் சிரியா நாடுகளின் வான்பரப்பில் பறக்க இது அனுமதி அளிக்கிறது எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply