நொடியில் கால் வலிபோகணுமா?

1.  செருப்புகளை கழற்றிவிட்டு காலை நன்கு தரையில் பதித்து நின்று கொள்ளவேண்டும். கட்டை விரலை உயர்த்தவேண்டும். பின் சுண்டுவிரலை உயர்த்தவேண்டும். இதே போன்று 5 முறை ஒவ்வொரு காலிலும் செய்தல் வேண்டும்.

2.  தரையில் அமர்ந்து காலைகளை நீட்டி முன்னங்காலினை மென்மையாக பின்னோக்கி இழுக்கவேண்டும். இதனை ஒரு முறை செய்வதே போதுமானது.

3. கால் பாதங்களில் அதிக வலி இருக்கும் போது டென்னிஸ் பந்தினை கால் பாதங்களின் அடியில் வைத்து கொண்டு முன்னும் பின்னும் உருட்டவேண்டும். இதன் மூலம் இரத்த ஓட்டம் சீராகி கால்களில் வலி குறைகிறது.

4.   தரையில் பாதங்களை அழுந்த பதித்து நின்று கொண்டு முன்னங்காலை ஊன்றி குதிகால்களை உயர்த்தவேண்டும். இதே போன்று 10 முறை செய்தால் கால்வலி குறையும்.

5. தரையில் படுத்து கொண்டு காலின் பாதங்களுக்கு அடியில் ஒரு உடற்பயிற்சி பந்தினை வைத்து பாதங்களை கொண்டு அதில் மெதுவாக அழுத்தம் கொடுக்கவேண்டும். இதனை தொடர்ந்து 15முறை செய்யவேண்டும். இதன் மூலம் கணுக்காலில் அழுத்தம் கொடுக்கப்பட்டு கால்வலி குறையும்.

6.  சிறிது நீரில் எப்சம் உப்பினை கலந்து அதில் கால்களை சிறிது நேரம் வைத்திருந்தாலும் கால் வலியானது குறையும்.

7. தரையில் வெறும் காலுடன் நடக்கும் போது இரத்த ஓட்டமானது சீராக வலி குறையும். கூழாங்கற்களின் மீது வெறுங்காலுடன் நடப்பது நல்ல பயனை அளிக்கும்.

Leave a Reply