நேரடி மானியத்துக்காக அளித்த வங்கிக் கணக்கை மாற்ற முடியுமா

வங்கிக் கணக்கை மாற்றலாம்

நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்காக வங்கியில் ஏற்கெனவே சேமிப்பு கணக்கு உள்ளவர்கள், ஊதியத்துக்காக வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள், பிரதமரின் மக்கள் நிதி (ஜன் தன்) திட்ட வங்கிக் கணக்கு உள்ளவர்கள் தங்களது வங்கிக் கணக்கு எண்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

ஊதியத்துக்காக வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறும்போது வங்கிக் கணக்கை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இது தவிர, வங்கிக் கணக்கை முடித்துக்கொள்பவர்கள், வேறு வங்கிக்கு மாற நினைப்பவர்கள் நேரடி மானியத்துக்காக அளித்த வங்கிக் கணக்கை மாற்ற முடியுமா? என ஐயம் தெரிவித்தனர்.

ஆனால், வாடிக்கையாளர்கள் அனைவரும் தேவையெனில், தங்களது வங்கிக் கணக்கை மாற்றிக் கொள்ள முடியும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

எப்படி மாற்றுவது?

நேரடி மானியத் திட்ட வங்கிக் கணக்கை மாற்ற நினைக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் விநியோகஸ்தரிடம் சென்று, எந்த வங்கிக் கணக்கில் மானியத் தொகையை பெற வேண்டுமோ அந்த வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலை சமர்பித்து மாற்றிக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு முறை மட்டுமே அனுமதி

வங்கிக் கணக்கை மாற்ற நினைக்கும் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை விநியோகஸ்தர்களால் ஒரு முறை மட்டுமே நிறைவேற்ற முடியும்.

இரண்டாவது முறையாக வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கை மாற்ற நினைத்தால் சம்பந்தப்பட்ட எண்ணை நிறுவனங்களிடம் விண்ணப்பித்து, முறையான காரணங்கள் இருந்தால் மட்டுமே வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு எண் மாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply