நீங்கள் சமூகத்திற்கு என்ன செய்தீர்கள்

அ… நா… ஊ… நா… மோடி சரியில்லை… ஜெயலலிதா சரியில்லை… அரசு அதிகாரிகள் சரியில்லை… மக்களுக்கு மனிதாபிமானம் இல்லை… என்று குறை கூறி கொண்டே இருப்பவர்களை, 
நீங்கள் சமூகத்திற்கு என்ன செய்தீர்கள்? அல்லது என்ன செய்ய விரும்புகிறீர்கள்? என கேட்டால், ஒன்றுமில்லை என்று தான் பதில் வரும்…
இது உங்களை பார்த்து கேட்கும் கேள்விகள்…

1. பியூஷ் மானுஷ் அவர்களுக்கு 5000 லைக்ஸ் கொடுப்போம். ஆனால் நேரில் சந்திக்க வர மாட்டோம்.

2. மரம் நடுங்கள் என்ற புகைப்படத்தை பகிர்வோம். ஆனால் ஒரு மரம் கூட நட்டு பாதுகாக்க மாட்டோம்.

3. வல்லரசு ஆக வேண்டும் என்ற வாசகத்தை மட்டும் பேசுவோம். அதற்காக ஒரு துரும்பையும் அசைக்க மாட்டோம்.

4. பல்வேறு குறைகள் / கோரிக்கைகள் மனதில் வைத்திருப்போம். அதை புகாராக கூட பதிவு செய்ய மாட்டோம்.
ஒரு மோடியோ, ஒரு ஜெயலலிதா, ஒரு சகாயம் அல்லது வேறு யாரோ ஒருவர் மட்டுமே எந்த மாயாஜாலமும் நிகழ்த்த முடியாது. நீ, நான், நண்பர்கள், உறவினர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள் என அனைவரும் சேர்ந்தால் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்… யாராவது செய்வார்கள், நமக்கேன் வம்பு என்று இருந்தால், கடைசி வரை இப்படியே தான் இருப்போம்… 
முதலில் நாம் மாறுவோம். பிறகு மற்றவர்களை மாற்றுவோம்.
நன்றி,

இளையதலைமுறை

Leave a Reply