நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

மறந்த பாடல் …

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது –  

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது


சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்! . .(கத்தி)ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்குயிர் பறித்தலின்றியே

மண்டலத்தில் கண்டிலாத சண்டையன்று புதுமையே! .(கத்தி)


குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே

எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசையில்லதாய் . .(கத்தி)


கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே

பாபமான செய்கையன்றும் பண்ணு மாசையின்றியே . .(கத்தி)


கண்டதில்லை கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி

பண்டு செய்த புண்ணியந்தான் பலித்ததே நாம் பார்த்திட! . .(கத்தி)


காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி

மாந்தருக்குள் தீமைகுன்ற வாய்ந்த தெய்வமார்க்கமே . .(கத்தி)  

“தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!”

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை !!!

பிறப்பு வெ. இராமலிங்கம்
அக்டோபர் 191888
மோகனூர்நாமக்கல் மாவட்டம்இந்தியா
இறப்பு ஆகத்து 241972(அகவை 83)
தேசியம் இந்தியர்,
மற்ற பெயர்கள் காந்தியக் கவிஞர்
அறியப்படுவது கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி
குறிப்பிடத்தக்க படைப்புகள் மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள் முதலியன.
அரசியல் இயக்கம் இந்திய விடுதலை இயக்கம்
சமயம் இந்து சமயம்
பெற்றோர் வெங்கடராமன், அம்மணியம்மாள்

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 191888 – ஆகஸ்ட் 241972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.

Leave a Reply