தேனீக்களின் அழிவு – மனித அழிவு

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தேனீக்கள் எண்ணிக்கையில் 2010 ஆம் ஆண்டில் திடீரென 30 விழிக்காடு தேனீக்கள் காணாமல் போனதைக் கண்டறிந்தார்கள். அமெரிக்காவின் சில பகுதிகளில் 80 விழுக்காடு தேனீக்கள் மாயமாகின. ‘காலனி கொலாப்ஸ் டிசார்டர்’ (CCD) என இதற்கு பெயரிட்டுள்ளனர். இந்த புதிய சிக்கலுக்கு செல்பேசிக் கோபுரங்கள்தான் காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனீக்கள் தமது தேன்கூட்டிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுவரை பறந்து சென்று பூக்களில் தேனைச் சேகரித்து கூட்டிற்கு திரும்புகின்றன. இந்த போக்குவரத்து முறைக்கு அவை முழுக்க முழுக்க பூமியின் மின்காந்த அலைகளைத்தான் நம்பியுள்ளன. அதாவது இயற்கையான மின்காந்த அலையை உணர்வதன் மூலமே அவை கூட்டிற்கு திரும்பும் வழியைக் கண்டறிகின்றன.

தேனீக்களின் இந்த இயற்கை வழிகாட்டி முறைக்கு செல்பேசிக் கோபுரங்கள் வேட்டு வைத்து விட்டன. இதனால், கூட்டை விட்டு தேனெடுக்க சென்ற தேனீக்கள் திரும்புவதற்கு வழிதெரியாமல் கூட்டமாக தற்கொலை செய்துகொண்டன. இந்த நிலையைதான் ‘காலனி கொலாப்ஸ் டிசார்டர்’ என்று அழைக்கின்றனர்.

தேனீக்களின் அழிவு சாதாரணமானது அல்ல.

புகழ்பெற்ற விஞ்சானி ஐன்ஸ்டின், “தேனிக்கள் முற்றிலுமாக அழிந்து போனால், அதிலிருந்து ஐந்து ஆண்டுகளில் மனித இனமும் அழிந்து போகும்” என்று குறிப்பிட்டார்.

ஏனெனில், உலகின் சுமார் இரண்டு லட்சம் பூக்கும் வகைத் தாவரங்களில் உற்பத்தி அயல் மகரந்தசேர்க்கை மூலமாகவே நடக்கிறது. மனித உணவின் பெரும்பகுதி அயல் மகரந்தசேர்க்கை மூலமாகவே கிடைக்கிறது. இந்த அயல் மகரந்தசேர்க்கை பணியில் பெரும்பகுதியை தேனீக்கள்தான் செய்கின்றனர்.

செல்போன் கோபுரங்களால், தேனீக்களும் இதர பூச்சிகளும் அழியும்போது தாவரங்கள் அழியும். இதிலிருந்து மனிதன் மட்டும் தப்பிவிட முடியாது.

—பசுமைப் பக்கங்களிருந்து

Leave a Reply