தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் எவை

உறுப்பு தானம் என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும்.
நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன்.
“பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இர ண்டுவித தானங்கள்தான் அதிகளவி ல் இருந்து வருகின்றன. வேறு எந்த மாதிரியான உடல் தானங்கள் கொடு க்கப்படுகின்றன என்பதை சொல்ல லாமே?”
உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது,

ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது.

இரண்டாவது, ஒருவர் இறந்த பின்ன ர் தருவது.

உயிருடன் இருக்கும் போது தானமா க தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?
“ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குட லின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.


இறந் த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?
“இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல் லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).”

வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும்?”

“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போ ன்ற அ னைத்தையும் தானமாக தரலாம்.

ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும். 

ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டா லோ அல்லது நுரையீரல் வேலை செய் யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிர யின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற் று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக்களையும், திசுக்களையும், எடு த்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.

எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரண மாக இருந்தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.

ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல் லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”

“ஒருவரின் மூச்சு – சுவாசம் நின் ற பின்னர் என்ன மாறுதல் மூ ளையில் ஏற்படுகிறது?”  “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன.

மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றன

நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத் திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக் க முடியாது.” 

Leave a Reply