தமிழுக்கு என்னம்மா குறை

கடந்த சனிக்கிழமை ஹஸ்பெண்டோட ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருந்தோம்.
அவரோட அப்பா பெங்களூர் யுனிவர்சிட்டி ரிட்டயர்டு ப்ரஃபசர்.
கன்னடம் தமிழ் தெலுங்கு ஹிந்தி துளு ஆங்கிலம் என பல்மொழி வல்லுனர்.

கன்னட மொழி குறித்து ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கியவர்.
கன்னடர். அவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. அவர் கூறியது எனது ஹிந்தி மொழிகுறித்த சிந்தனையையே மாற்றிவிட்டது.

அவர் கூறியது…அம்மா,
தமிழகம் போல ஆட்சி செய்யனும்னுதான் நாங்களும் விரும்பறோம்…
அங்க கருணாநிதியும் ஜெயலலிதாவும் அருமையான கட்டமைப்பை உருவாக்கி வச்சிருக்காங்க. ஆனா இப்ப அங்கேயும் வடமாநில ஆதிக்கம் ஊடுறவரத பாக்க முடியுது. ரொம்ப வேதனையா இருக்கு.
எங்களை பார்த்து நீங்க திருந்திக்கனும்.

இங்க பெங்களூர்ல ஹிந்தி மொழி ஆதிக்கம் வந்து பல காலமாகிடுச்சி.
கொஞ்சம் கொஞ்சமா ஊடுறுவி இப்ப எங்களால சமாளிக்க முடியாத அளவு ஆக்கிரமிச்சிட்டாங்க.

அவன் வடநாட்டுலருந்து இங்க வந்து ஹிந்தில பேசறான். எனக்கு ஹிந்தி மட்டுந்தான் தெரியும்னு ஆணவமா சொல்றான்.

கன்னடம் தெரியாதுங்கறான்.
எவரும் உலகத்துல எங்க போனாலும் அந்த பிரதேச மொழியில பேசறதுதான் வழக்கம். ஆனா இங்க மட்டும் அவனுக்காக நாங்க எங்க தாய்மொழிய விட்டுவிட்டு அவன்கிட்ட ஹிந்தில பேசற நிலைமைக்கு வந்துட்டோம்.

மொழிங்கறது வெறும் பேச்சில்லைமா.
அது வாழ்க்கை. ஜீவாதாரம்.
ஆனா நாங்க அந்த ஜீவாதாரத்தை தொலைச்சிகிட்டு இருக்கோம்.இப்ப எங்க தாய்பூமி பெங்களூர்ல குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வாழ முடியும்கிற அளவுக்கு ஒடுக்கப்பட்டு வருகிறோம்.

சிட்டியில முக்கிய இடங்கள்ல அவனுங்கதான் வாழறாங்க.
…. சித்தராமையா கூட
நான் ஸ்கில் லேபர்ஸ் கன்னடர்களாகத்தான் இருக்க வேண்டும் என சட்டம் போடப்போறதா அறிவிச்சாரு. ஆனா முடியவில்லை.

வடமாநில பிரஷர்தான் காரணம்மா.
இதுக்கெல்லாம் அடிப்படை காரணம்..
தமிழகம் மாதிரி மாநிலநலன் சார்ந்த கட்சிகளை நாங்க ஆதரிக்காமதேசியகட்சிகளை ஆதரித்ததுதான் மிக முக்கிய காரணம்.

தமிழகம் போல இருமொழி கொள்கை இல்லாம மும்மொழி கொள்கையை ஏற்றதுதான்.
அவன் கடிக்க வர்ற நாய்க்கு எலும்பை போடுற மாதிரி…
நவோதயா பள்ளி ஆரம்பிச்சா மத்திய அரசு நிதி தரும்.

அது தரும் இது தரும்னு ஆசை காட்டுவாங்க. அது உங்க நன்மைக்கு இல்லை. அவன் ஆளுங்களுக்கு வாழ்வாதாரத்தை அதிகப்படுத்ததான்.
தமிழுக்கு என்னம்மா குறை.

ஏன் ஹிந்தி கற்க ஆர்வப்படுறீங்க..
உள்ளூர் தொடர்புக்கு தமிழ்
உலகத்தொடர்புக்கு ஆங்கிலம் போதும்மா.

இப்பவே பல நிலைகளிலும் உங்க வேலைவாய்ப்புகளை ஹிந்திகாரங்க பறிக்க துவங்கியாச்சி. நீங்க ஹிந்திமேல ஆர்வப்பட்டா அவங்க ஊடுவறுதும் தன் ஆட்களை தென் மாநிலங்களில் குடியேற்றுவதும் எளிதாகிவிடும்…எனவே
அனுபவபட்டவன் என்கிற முறையில நான் சொல்றேன்.

ஹிந்தி கற்க ஆர்வப்படாதீங்க.ஒருவேளை வடமாநிலத்துக்கு யாராவது வேலைக்குபோனா அவன் தானா ஹிந்திகத்துக்குவான்.
ஹிந்தி கத்துக்க ஆர்வப்படாதீங்க.
மும்மொழிக்கொள்கைகயை ஆதரிக்காதீங்க.

தேசிய கட்சிகளை ஆதரிக்காதீங்க.
இதெல்லாம் செஞ்சா உங்க
வாழ்வாதாரமே சீரழிஞ்சிடும்.
உங்க தலைமுறைக்கு பிறகு உங்க இனமும் அவனுக்கு அடிமைபட்டு போய்டும்…

என வருத்தப்பட்டு கூறினார்.
இது எந்தளவு ஏற்புடையது என நீங்கதான் சொல்னும்.
இது எமக்கு வந்த தகவல் சிந்திப்பீர் !
உங்கள் க.திருவள்ளுவன்
சென்னை

Leave a Reply