தமிழர்கள் வாழும் ஒரு தீவைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

தமிழர்கள் வாழும் ஒரு தீவைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க..!
ஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும் ரீயூனியன் தீவு!
இந்தத் தீவு எங்கிருக்குன்னா, ஆப்பிரிக்க கண்டத்துக்கு கிழக்கே – இந்து மகா கடலில்,மொரீசியஸ் அருகே உள்ள, உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகக் ஒரு மிகச்சிறிய தீவா இது காணப்படுது. இந்த தீவில் தமிழர்கள் ஒன்றரை இலட்சம் பேர் வாழறாங்க என்பது ஒரு சந்தோஷமான விஷயம்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து மிகத் தொலைவில் இருந்தாலும் கூட இது பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப் பகுதியா இன்னமும் இருக்கிறது. உலகில் தமிழர் மகிழ்ச்சியாக வாழும் இடங்கள் இருக்குன்னா அதுல ஒண்ணுதான் இந்த ரீயூனியன் தீவு!
சுமார் 65 கிலோ மீட்டர் நீளமும் 45 கிலோ மீட்டர் அகலமும் உள்ள மொத்தமாக 2500 சதுர்கிலோமீட்டர் பரப்பளவே இருக்கற இந்த தீவின் மொத்த மக்கள் தொகையே சுமார் எட்டரை லட்சம்தான். அதில் தமிழர்களோட எண்ணிக்கை மட்டுமே ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு. அதாவது சுமார் ஒன்னரை லட்சம்! 170-180 ஆண்டுகளுக்கு முன்னால் பிழைப்பு தேடி தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்ற தமிழர்களின் சந்ததியினர்தான் இப்போது இங்கே வாழ்ந்து கொண்டு இருக்காங்க.
உலகில் தமிழகத்திற்கு வெளியே சென்ற தமிழர்களில் மிகவும் மதிப்புடனும், மகிழ்ச்சியாகவும், சாதியப் பாகுபாடுகளில்லாமல் சம உரிமை பெற்று வாழ்கின்ற வர்களில் இவங்களே முதன்மையானவங்களா இருக்காங்க..
பாண்டிச்சேரி பிரெஞ்சுப் பிரதேசமாக இருந்தப்போ 1827 ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 25 வருஷங்கள் தொடர்ச்சி யாக, பாண்டிச்சேரி, காரைக்கால், ராமநாதபுரம், புதுக் கோட்டை, தஞ்சாவூர், போன்ற பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் அப்போதைய நாட்களில் ஒரு பிரெஞ்சு காலனியாக இருந்த ரீ யூனியன் தீவில் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் அழைத்துச் செல்லப்பட்டு இருக்காங்க. இரண்டும் பிரெஞ்சுப் பிரதேசங்களாக இருந்ததால் விசா, பாஸ்போர்ட் போன்ற பிரச்சினைகளே இல்லை!

சிலர் இலங்கையில் (யாழ்ப்பாணம்)) இருந்தும் இந்த தீவுக்கு வந்து குடியேறினாங்க. இப்போது இங்கு உள்ள தமிழர்களில் பலர் அவர்களின் சந்ததியினர்.
ஆரம்பத்தில் ஒப்பந்தக் கூலியாக அழைத்துச் செல்லப்பட்டாலும், பிற்காலத்தில் பிரெஞ்சு அரசு இவங்க அத்தனை பேருக்கும் பிரெஞ்சு குடியுரிமை அளித்து கௌரவமிக்க பிரெஞ்சு குடிமக்களாக ஏற்றக் கொண்டது. இவங்க அனைவரும் இன்று சம உரிமை பெற்று மகிழ்ச்சியான பிரெஞ்சு குடிமக்களாக வாழறாங்க. பிரெஞ்சுத் தமிழர்கள்ன்னு பெருமையோட சொல்லிக்கிறாங்க!
ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலாச்சாரங்களுடன் ஒன்று கலந்து ட்டாலும், இன்னமும் இவங்க தங்களுக்கேத்த முறைகளில், தமிழ்ப் பண்பாட்டு வழிகளையும் விடாமல் தொடர்கிறார்கள்.
தைப்பூசம், பங்குனி உத்திரம், காவடியாட்டம், கரகாட்டம், காளியம்மன், முருகன், சிவன் எல்லாம் இவர்களை இன்னமும் தமிழுடன் இணைத்து வைத்திருக்கின்றனர்!
அத்தனையையும் இப்போதும் விடாமல் கொண்டாடிக் கொண்டும் இருக்கின்றார்கள்.
வெளியில் ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலாச்சாரம் இருந்தாலும், வீட்டுக்குள் இன்னமும் தமிழ் வாழ்கிறது. தமிழ் நாட்டிலிருந்து கலாச்சார தொடர்பை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அவர்களுக்கு தாய்த் தமிழகத்திடம் உள்ள ஒரே வேண்டுகோள் – அவர்களுக்கு தமிழும், இசையும், நடனமும், இலக்கியமும் கற்றுத் தர தாய்த் தமிழகம் உதவ வேண்டும் என்பதுதான்! இதுக்கு நம்ம டாஸ்மாக் சிந்தனை தமிழக அரசு செவி சாய்க்குமா?. 
அற்புதமான இயற்கை வளம் நிரம்பியது ரீயூனியன்.
இதுவரை 100 முறைகளுக்கு மேல் நெருப்புக் குழம்பைக் கக்கியுள்ள இரண்டு எரிமைலைகள் இந்த தீவில இருக்கு. ஒன்று சுமார் 2600 மீட்டர் உயரமுள்ளது. மற்றொன்னு 3200 மீட்டர் உயரமுள்ளது. இந்த எரிமலைகளின் சரிவுகளில் அடர்ந்த காடுகள் இருக்கு.
ரீ யூனியனின் தீவின் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னென்னா அந்த தீவோட மழை வளம்!.
1966 ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிக்கு இடைப்பட்ட 24 மணி நேரத்துல, இங்கு 1,870 மில்லிமீட்டர் (சுமார் 73.6இஞ்ச் ) மழை பெய்தது. ஒரு உலக ரெக்கார்டு – இதுவரை இது முறியடிக்கப்படவில்லை.
வாழ்க நம் தமிழ்! 

வாழ்க நம் தமிழர் மரபு கலாசாரம்!.
“என் மக்கள்” 

கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…

Leave a Reply