தங்கத்தின் தூய்மை

இந்தியாவில் தங்க நகைகள் 22 கேரட் தங்கத்தால் செய்யப்படுகின்றன, ஆனால் மற்ற நாடுகளில் 14 அல்லது 18 கேரட் தங்கத்தால் செய்யப்படுகிறது.

இந்தியர்கள் திருமணம் மற்றும் இதர வைபவங்களுக்கு தங்கம் அதிகளவில் வாங்குகின்றனர். பொதுவாக, பல ஆண்டுகளுக்குப் பின்னர் தங்க நகையை விற்று வேறு நகை வாங்கும் பொழுது நகைகளுக்கு அளிக்கப்பட சான்றிதல்கள் பயனளிப்பதில்லை.
தங்கம் வாங்கும் பொழுது தங்கத்தின் தூய்மையை கண்டறிவது எப்போதுஎன்பது முதல் கேள்வியாய் வந்து நிற்கிறது. தங்க நகைகள் வாங்கும் பொழுது பார்க்க வேண்டிய அடிப்படியான விஷயங்கள் பற்றி எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.

நகைக் கடைகளில் தங்கத்தின் தூய்மையை சரிபார்க்க இங்கே சில வழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன

வாடிக்கையாளருக்கு நஷ்டம்
பொதுவாக நகைக்கடைக்காரர்கள் 22கேரட் தங்க நகைகளுக்கு கல்லின் எடையையும் நகையின் எடையோடு சேர்த்து விடுவர் அதனால் வாடிக்கையாளர்களுக்கு நஷ்டமே.

முத்திரைகள்

இந்திய தரக் கட்டுப்பாட்டு சட்டத்தின் (BIS) கீழ் தரக்குறியிடும் நிறுவனம் (ஹால் மார்க் ), தங்கத்தின் தரத்தை இந்திய நியமத்திற்கு ஏற்ப சான்றளிக்கும்.

BIS ஸ்டாண்டர்ட் மார்க்

இந்திய தரக்கட்டுப்பாட்டின் முக்கோண முத்திரை தான் BIS முத்திரை.
நகைகடைக்களில் விற்கப்படும் நகைகள் தரக்குறியிடும் நிறுவனத்தால் சோதிக்கப்பட்டதென்றும் தரக்குறியீடு அளிக்கப்பட்டதென்றும் அங்கீகரிக்கிறது.

தூய்மையின் தரம்

தங்கத்தின் தூய்மையைக் சில குறியீடு மூலம் குறிப்பிடப்படும். 8 கேரட் தங்கம் 333 என தொடங்கி , 24கேரட் தங்கம் 999 என்பது வரை மாறுபடும்.
999 – 24 கேரட் – சுத்த தங்கம்
958 – 23 கேரட்
916 – 22 கேரட்
875 – 21 கேரட்
750 – 18 கேரட்
708 – 17 கேரட்
585 – 14 கேரட்
417 – 10 கேரட்
375 – 9 கேரட்
333 – 8 கேரட்

குறியிட்ட ஆண்டு

குறியீட்டில் உள்ள எழுத்துக்கள் தரக்குறியீடு செய்த ஆண்டைக் குறிக்கிறது, இது தரக்கட்டுப்பாட்டு சட்டத்தால் முடிவு செய்யப்பட்டவை .
உதாரணமாக A என்பது 2000 வது வருடத்தையும்,
J என்பது 2008வது வருடத்தையும் குறிக்கும்.

நகைக் கடையின் அடையாளக் குறி

தரக்கட்டுப்பாட்டு விதிகளின் மூலம் சான்றளிக்கப்பட்ட நகைக்கடை அல்லது நகை செய்பவர்களுக்கு BIS அடையாளக் குறி கொடுக்கப்படும்.

KDM நகைகள் தர மதிப்பீடு செய்யப்பட்டவை இல்லை. எனவே KDM நகைகள் யாவும் தூய்மையானவை அல்ல.

தங்கத்தின் தூய்மை ஏன் பரிசோதிக்கப்பட வேண்டும்?

பல காலங்களுக்குப் பிறகு தங்கத்தை விற்கும் பொழுது அதற்கு நன்மதிப்பு கிடைப்பதில்லை, அதிலும் புதிய தங்கம் வாங்கும் பொழுது இது பெரும்பாலும் நடக்கிறது. இதற்குக் காரணம்,
அந்த தங்கம் தரக்குறியிடப் பட்டது அல்ல. விலை கொடுத்த வாங்கிய தங்கம் தூய்மையானது தானா என்று நாம் பரிசோதிக்க தவறி விட்டோம். அதிகமாக தங்கம் வாங்கிய பொழுது நாம் இழந்த பணமும் அதிகமே. எனவே தங்கத்தின் தூய்மையை சோதிப்பது அத்தியாவசியமாகிறது.
பெரும்பாலான நகைக் கடைகளில் இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்டு தங்கத்தின் தூய்மை பரிசோதிக்கப்படுகிறது.
சமீபத்தில் ஹைதராபாத்தில் எக்ஸ் ரே கதிர்கள் கொண்டு நகையை பரிசோதிக்கும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இயந்திர தட்டில் ஆபரணத்தை வைத்ததும் என்னென்ன உலோகம் அதில் பயன்படுத்தப் பட்டுள்ளது, அதன் விகிதத்தையும் எடையையும் துல்லியமாக அறிவித்து விடுமாம்

Leave a Reply